தங்கம் வாங்க தூண்டும் நிறுவனம்..
கோல்மான் சாச்ஸ் என்ற பிரபல நிறுவனம் தற்போது முதலீட்டாளர்களை தங்கம் வாங்குங்கள் என்று அறிவுறுத்தி வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் அண்மையில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுவிட்ட நிலையில், தங்கத்தின் விலை அடுத்தாண்டில் உயரும் என்று அந்நிறுவனம் கணித்துள்ளது. அடுத்தாண்டு டிசம்பரில் ஒரு அவுன்ஸ் தங்கம் நிச்சயம் 3,000 அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர். தங்கம் இந்தாண்டு அதிக விலையேற்றத்தை சந்தித்து வந்த போதிலும், பலரும் வாங்கவே ஆர்வம் காட்டி வந்தனர். எளிமையான பாலிசிகளை அளிப்பது தொடர்பாக ஃபெடரல் ரிசர்வ் வங்கி முயற்சிகள் செய்து வருகிறது. தனிநபர்கள் வாங்குவது மட்டுமின்றி பல நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. 2,589 டாலராக ஒரு அவுன்ஸ் தங்கம் தற்போது விற்கப்படுகிறது. கடந்த மாதம் இந்த தங்கம் விலை உச்சபட்சமாக 2,790 டாலர்களாக இருந்தது மேலும் கச்சா எண்ணெய் விலை தற்போது 70-85 டாலர்களாக இருக்கும் நிலையில் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி அமெரிக்காவில் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானுடன் சண்டையிட்டு வரும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.