Latest: ஈரான் போரினால் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள்The Iran War's Shadow: India's Perilous Dance with the Global Oil and Gas Crisisசெமி கண்டக்டர் உற்பத்தியை தொடங்கும் விப்ரோ எண்டர்பிரைசஸ்LPG சிலிண்டர்கள் தட்டுப்பாடு, பெங்களூருவில் ஹோட்டல்கள் மூடல்டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ரூ.92.26ஆக வீழ்ச்சிஈரான் போரி விரைவில் முடியும் எனக் கூறும் டிரம்ப், சரியும் கச்சா எண்ணெய் விலைஏ.ஐ பாதிப்புகள் பற்றிய அச்சங்கள் மிகையானவை – டி.சி.எஸ் தலைவர்4 நாட்களில் ரூ.21,000 கோடிக்கு பங்கு விற்பனை செய்த அன்னிய முதலீட்டாளர்கள்அமெரிக்காவில் புற்றுநோய் மருந்தை திரும்பப் பெற்ற சிப்லா நிறுவனம்117 டாலரை எட்டிய கச்சா எண்ணெய் விலை

22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
உள்நாட்டு செய்திகள்

டாடா மோட்டார்ஸ் PV : லாபம் .. காரணம் என்ன??.

2025-26 செப்டம்பர் காலாண்டில், மின்சார வாகனங்கள் (EV) மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) வணிகங்களை தற்போது வைத்திருக்கும் டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெகிக்கில்ஸ் நிறுவனத்தின் (TMPV) ஒருங்கிணைந்த நிகர லாபம் ₹76,248 கோடியாக 25 மடங்கு உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது.
டாடா மோட்டர்ஸின் வணிக வாகன பிரிவும், பயணிகள் வாகன பிரிவுகளும் தனியாக பிரிக்கப்பட்டதன் தொடர்புடைய ₹82,616 கோடி அளவிலான ஒரு முறை லாபம் இந்த உயர்வுக்கு காரணமாகும்.

இருப்பினும், இந்த லாபத்தைத் தவிர்த்து, JLR அளவுகளில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியால் ஒட்டுமொத்த செயல்திறன் குறைந்ததால், இந்நிறுவனம் ₹6,368 கோடி இழப்பை சந்தித்தது. கடந்த ஆண்டு காலாண்டில் இந்நிறுவனம் ₹3,056 கோடி நிகர லாபத்தை ஈட்டியிருந்தது.

ஒருங்கிணைந்த வருவாய் ₹71,714 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈடப்பட்ட ₹82,841 கோடியிலிருந்து 13.4% குறைந்துள்ளது. வருவாய் அளவு முந்தைய காலாண்டில் பதிவு செய்யப்பட்ட ₹87,141 கோடியிலிருந்து 18% குறைந்துள்ளது.

டாடா மோட்டார்ஸின் ஒட்டுமொத்த வணிகத்தில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்ட JLR இன் வருவாய் 24.3% குறைந்துள்ளது. அதே நேரத்தில் உள்நாட்டு பயணிகள் வாகனப் பிரிவின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 15.6% அதிகரித்து ₹13,500 கோடியாக உள்ளது.

செயல்பாட்டு மட்டத்தில், நிறுவனம் ₹1404 கோடி EBITDA இழப்பை பதிவு செய்துள்ளது. இது செப்டம்பர் 2024 காலாண்டில் பதிவு செய்யப்பட்ட ₹9,914 கோடியிலிருந்து பெரிய அளவிலான சரிவாகும்.

ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு மற்றும் பண்டிகை கால தேவைகளினால், இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் உள்நாட்டு வணிகம் 11% ஆண்டு வளர்ச்சியை பெற்றது. இந்த காலாண்டில் 1.44 லட்சம் யூனிட்களை (EV-கள் உட்பட) விற்றது, இந்தப் பிரிவின் வருவாய் ஆண்டுக்கு 15.6% அதிகரித்து ₹13,000 கோடியாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் EBITDA லாப விகிதம், ஆண்டுக்கு 40 அடிப்படை புள்ளிகள் குறைந்து 5.8% ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *