முத்தூட் குடும்பத்தில் பணமழை..!!!
கடந்த 90 வருடங்களாக தங்கக் கடன்களை வழங்கி வரும் முத்தூட் நிறுவனம், தங்கம் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளதால், ஏற்றம் பெற்றுள்ளது. இதை நடத்தி வரும் பில்லியனர் முத்தூட் குடும்பம் அதன் பலன்களை அறுவடை செய்கிறது.
இந்த ஏற்றம், அந்நிறுவனத்தின் பங்குகளை சாதனை அளவிற்குத் அதிகரித்து, முத்தூட் குடும்பத்தினரின் சொத்து மதிப்பை $1300 கோடிக்கு மேல் உயர்த்தியுள்ளதாக ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டு எண் தெரிவிக்கிறது.
“சந்தை மிகப் பெரிய அளவில் விரிவடைந்து வருகிறது” என்று இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், மூன்றாம் தலைமுறை நிர்வாகியுமான 70 வயதான ஜார்ஜ் அலெக்சாண்டர் முத்தூட் கூறியுள்ளார். “பணக்காரர்களுக்குக் கூட, தங்கக் கடன்களை எடுப்பது இன்று ஃபேஷனாகிவிட்டது.”
முத்தூட் ஃபைனான்ஸ் லிமிடெட்டின் எழுச்சி, இந்தியாவின் நிழல் வங்கித் துறையின் வளர்ந்து வரும் செல்வாக்கை சுட்டிக் காட்டுகிறது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தி அளிக்கிறது. ஜூன் மாதத்தில் முடிவடைந்த 12 மாதங்களில், இந்தத் துறையில் தங்கக் கடன் 35 சதவீதம் உயர்ந்து, ₹13.4 லட்சம் கோடியாக ($151 பில்லியன்) ஆக உயர்ந்துள்ளது. இது நுகர்வோர் கடன்களில் மிக வேகமான வளர்ச்சியாகும் என்று CRIF ஹை மார்க் கிரெடிட் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் தெரிவித்துள்ளது.
தங்கம் சாதனை உச்சத்தை நெருங்கி வருவதால், போட்டியாளர்களை சமாளிப்பதே இந்நிறுவனத்தின் மிகப்பெரிய சவாலாக உள்ளது. தங்கக் கடன் நிறுவனமான மணப்புரம் ஃபைனான்ஸில் 18 சதவீத பங்குகளுக்கு சுமார் $50 கோடி செலுத்த பெய்ன் கேபிடல் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து போட்டி சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில் மிட்சுபிஷி யுஎஃப்ஜே ஃபைனான்சியல் குரூப், நிழல் வங்கியான ஸ்ரீராம் ஃபைனான்ஸில் 20 சதவீதத்தை $260 கோடிக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
முத்தூட் ஃபைனான்ஸ் தனது 7,500க்கும் மேற்பட்ட கிளைகளின் வலையமைப்பை, ஆண்டுக்கு 200 வரை விரிவுபடுத்தும் திட்டம், இந்தியாவின் முன்னணி தங்கக் கடன் வழங்குநராக அதன் ஆதிக்கத்தைத் தக்கவைக்க போதுமானதாக இருக்காது
