Latest:
The Way Ahead for the Tata Groupடாடா குழுமத்தின் எதிர்காலப் பாதைAI தாக்கத்தின் மத்தியில், புதிய உலகளாவிய வணிகப் பிரிவுகளை அறிவித்துள்ள TCS11 AI நிறுவனங்களில் 4,300 கோடி டாலர் முதலீடு செய்த பிரேம்ஜி இன்வெஸ்ட்அமெரிக்க ரிசர்வ் வங்கியின் பணவியல் குழுவில் 3 இந்தியர்கள் நியமனம்ரூபாய் மதிப்பை நிலை நிறுத்திய ரிசர்வ் வங்கியின் 10,000 கோடி டாலர் சவால்சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான செபியின் புதிய சீர்திருத்தங்கள்AI ஆதிக்கம் காரணமாக 35,000 தொழில்நுட்பப் பணியிடங்கள் ரத்தாக வாய்ப்புசட்டத்தின் பிடியில் இருந்து அனில் அம்பானியின் சமீபத்திய தப்பித்தல்Anil Ambani's Latest Escape: How India's Super-Rich Continue to Evade Accountability in a Pattern of Elite ImpunityThe Way Ahead for the Tata Groupடாடா குழுமத்தின் எதிர்காலப் பாதைAI தாக்கத்தின் மத்தியில், புதிய உலகளாவிய வணிகப் பிரிவுகளை அறிவித்துள்ள TCS11 AI நிறுவனங்களில் 4,300 கோடி டாலர் முதலீடு செய்த பிரேம்ஜி இன்வெஸ்ட்அமெரிக்க ரிசர்வ் வங்கியின் பணவியல் குழுவில் 3 இந்தியர்கள் நியமனம்ரூபாய் மதிப்பை நிலை நிறுத்திய ரிசர்வ் வங்கியின் 10,000 கோடி டாலர் சவால்சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான செபியின் புதிய சீர்திருத்தங்கள்AI ஆதிக்கம் காரணமாக 35,000 தொழில்நுட்பப் பணியிடங்கள் ரத்தாக வாய்ப்புசட்டத்தின் பிடியில் இருந்து அனில் அம்பானியின் சமீபத்திய தப்பித்தல்Anil Ambani's Latest Escape: How India's Super-Rich Continue to Evade Accountability in a Pattern of Elite Impunity

உள்நாட்டு செய்திகள்

வங்கி சேவை பற்றிய விளம்பரங்களுக்கான RBI கட்டுப்பாடுகள்

வங்கிகள் நிதித்துறை சார்ந்த முதலீட்டு திட்டங்களை விளம்பரப்படுத்துவது, சந்தைப்படுத்துவது மற்றும் விற்பனை செய்வது குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய வழிகாட்டுதல்கள், வங்கிகள் மீது குறுகிய கால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும், ஆனால் நீண்ட காலத்திற்கு வங்கித் துறைக்கு சாதகமாக இருக்கும் என்று இண்டஸிண்ட் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜீவ் ஆனந்த் கூறியுள்ளர்.

”கடந்த சில ஆண்டுகளாக ரிசர்வ் வங்கியின் கவனம் வாடிக்கையாளர் பாதுகாப்பைச் சுற்றியே உள்ளது. தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளால் தவறாக விற்பனை செய்யப்படும் சில முதலீட்டு திட்டங்கள் பற்றிய தரவுகளை அவர்கள் பார்த்திருப்பார்கள்” என்று ஆனந்த் கூறினார்.
”இந்த கடுமையான புதிய நெறிமுறைகள், குறுகிய காலத்தில் சில வங்கிகளை பாதிக்கலாம், ஆனால் எதிர்காலத்தில் வங்கித்துறையை மிகவும் வலிமையாக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.

வரைவு விதிமுறைகளின்படி, தவறான விற்பனை என்பது வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்ட தொகையைத் திரும்ப அளிப்பது மட்டுமல்லாமல், இழப்பீட்டை வழங்குவதையும் உள்ளடக்கும். இது காப்பீடு, பரஸ்பர நிதிகள் மற்றும் ஓய்வூதியம் போன்ற மூன்றாம் தரப்பு தயாரிப்புகளை தீவிரமாக விற்பனை செய்யும் வங்கிகளின் உற்சாகத்தை மட்டுப்படுத்தும். இந்த மாத தொடக்கத்தில், மத்திய வணிகத் துறை தெரிவித்தது போல, இது அவர்களின் பிற வருமானத்தைக் குறைக்கக்கூடும். முன்மொழியப்பட்ட விதிமுறைகள் காரணமாக சில தனியார் வங்கிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர், ஏனெனில் அவற்றின் முக்கிய வருமானத்திற்கும் பிற வருமானத்திற்கும் இடையிலான இடைவெளி கடந்த ஆண்டுகளில் கடுமையாகக் குறைந்துள்ளது.

கையகப்படுத்தல் நிதி குறித்த ரிசர்வ் வங்கியின் இறுதி வழிகாட்டுதல்கள், பெரிய அளவிலான பரிவர்த்தனைகளுக்கு, சில பெரிய வங்கிகளுடன் கூட்டு சேர இண்டஸிண்டுக்கு வாய்ப்பளிக்கக்கூடும் என்று ஆனந்த் கூறினார்.

அனைத்து பரிவர்த்தனைகளும் வெளிநாட்டு வங்கிகளிலிருந்து இந்திய வங்கிகளுக்கு நகராது, ஆனால் இந்திய வங்கிகள் இந்த துறையில் பங்கேற்க ஒரு நியாயமான களத்தை இது வழங்குகிறது என்று அவர் மேலும் கூறினார். முன்மொழியப்பட்ட 10 சதவீத உச்சவரம்புக்கு எதிராக, வங்கிகள் தங்கள் அடுக்கு-1 மூலதனத்தில் 20 சதவீதம் வரை கையகப்படுத்தல் நிதியை செயல்படுத்தலாம் என்று ரிசர்வ் வங்கியின் இறுதி வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *