Latest:
வோடபோன் ஐடியா உபரி பணப்புழக்கத்தை அடைவதன் முக்கியத்துவம்பங்குப் பரிமாற்றப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள டாடா குழுமம் மற்றும் ஷாபூர்ஜி பல்லோன்ஜிஇலவச யுபிஐ பணப்பரிவர்த்தனைக் கனவு முடிவுக்கு வருகிறதா?Is the Free UPI Payments Dream Coming to An End?Tata.Cars என்ற புதிய பிராண்ட் அடையாளத்தை அறிமுகப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்கூகிள் கிளவுட் AI ஒப்பந்தத்தினால் விப்ரோவின் ADR-கள் 7% உயர்வுITC இன்ஃபோடெக்கின் கொள்முதல் திட்டத்தால் ஹாப்பியஸ்ட் மைண்ட்ஸ் பங்கு விலை 6% சரிவுடி ஸ்டீல் ஹோல்டிங்ஸில் ₹1,340 கோடி முதலீடு செய்த டாடா ஸ்டீல்உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ. 6,000 கோடி முதலீடு செய்யும் JSW MG மோட்டார் இந்தியாAI நவீனமயமாக்கலை முன்னெடுக்க வோடஃபோன் பிசினஸுடன் டெக் மஹிந்திரா ஒப்பந்தம்வோடபோன் ஐடியா உபரி பணப்புழக்கத்தை அடைவதன் முக்கியத்துவம்பங்குப் பரிமாற்றப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள டாடா குழுமம் மற்றும் ஷாபூர்ஜி பல்லோன்ஜிஇலவச யுபிஐ பணப்பரிவர்த்தனைக் கனவு முடிவுக்கு வருகிறதா?Is the Free UPI Payments Dream Coming to An End?Tata.Cars என்ற புதிய பிராண்ட் அடையாளத்தை அறிமுகப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்கூகிள் கிளவுட் AI ஒப்பந்தத்தினால் விப்ரோவின் ADR-கள் 7% உயர்வுITC இன்ஃபோடெக்கின் கொள்முதல் திட்டத்தால் ஹாப்பியஸ்ட் மைண்ட்ஸ் பங்கு விலை 6% சரிவுடி ஸ்டீல் ஹோல்டிங்ஸில் ₹1,340 கோடி முதலீடு செய்த டாடா ஸ்டீல்உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ. 6,000 கோடி முதலீடு செய்யும் JSW MG மோட்டார் இந்தியாAI நவீனமயமாக்கலை முன்னெடுக்க வோடஃபோன் பிசினஸுடன் டெக் மஹிந்திரா ஒப்பந்தம்

உள்நாட்டு செய்திகள்

AI ஆதிக்கம் காரணமாக 35,000 தொழில்நுட்பப் பணியிடங்கள் ரத்தாக வாய்ப்பு

கடுமையான போட்டி நிலவும் சந்தையில் உற்பத்தித் திறனை அதிகரிப்பதில் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருவதால், இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் சேவைத் துறை இந்த ஆண்டில் 35,000 வரையிலான வேலைவாய்ப்புகளைக் குறைக்கக்கூடும் என்று துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பணியாளர் நியமன நிறுவனமான ‘TeamLease’-இன் தரவுகளின்படி, மே மாதம் வரை 10,000 முதல் 15,000 வரையிலான தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிநீக்கங்களுக்கு ஆளாகியுள்ளனர்; இந்த ஆண்டில் மொத்த பாதிப்பு 25,000 முதல் 35,000 வரை இருக்கலாம் என்றும் அந்நிறுவனம் கணிக்கிறது. CIEL HR சர்வீசஸ் நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, இதுவரை சுமார் 12,000 வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன; இந்த ஆண்டின் இறுதியில் பணிநீக்கங்களின் எண்ணிக்கை 18,000 முதல் 21,000 வரை இருக்கலாம். இதனால் 2025-26 காலகட்டத்தில் மொத்த வேலை இழப்பு 43,000 வரை எட்டக்கூடும்.

பெருந்தொற்றுக் காலத்தில் அதிகளவில் பணியாளர்களை நியமித்த பிறகு ஏற்பட்ட வணிக மந்தநிலை காரணமாக, 31,500 கோடி டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள தகவல் தொழில்நுட்பச் சேவைத் துறை தனது கூடுதல் பணியாளர்களைக் குறைத்து வருவதையே இந்த எண்கள் காட்டுகின்றன. கடந்த ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ் மற்றும் உலகளாவிய நிறுவனமான அக்சென்ச்சர் ஆகியவை இணைந்து குறைந்தது 23,000 உலகளாவிய வேலை குறைப்புகளை அறிவித்தன. ஆனால் தற்போதைய பணிநீக்க அலை முறையான அறிவிப்புகள் இன்றி, செயல்திறன் மற்றும் திறன் சார்ந்த காரணங்களால் பணியாளர்கள் வெளியேற்றப்படுவதன் மூலம் அமைதியாக நடைபெறுகிறது.

2025-ஆம் ஆண்டு அதிகப்படியான பணியாளர் நியமனத்தைச் சரிசெய்வதாக அமைந்திருந்தால், இந்த ஆண்டு ஒட்டுமொத்த பணியாளர் கட்டமைப்பையும் மறுவடிவமைப்பு செய்வதாக அமைந்துள்ளது என்று ‘TeamLease’ கூறியுள்ளது. முந்தைய மந்தநிலைகளை விட தற்போதைய சூழல் மாறுபட்டது என்றும், வேலை இழப்புகள் பலவீனமான தேவையுடன் தொடர்புடையதாக இல்லாமல், செயற்கை நுண்ணறிவு சார்ந்த உற்பத்தித் திறன் அதிகரிப்பு, திறன் பொருந்தாமை மற்றும் நிறுவனக் கட்டமைப்பை எளிமையாக்குதல் ஆகியவற்றுடன் தொடர்புடையவை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2023-24 நிதியாண்டில் சுமார் 69,000 வேலை இழப்புகள் ஏற்பட்ட பிறகு, 2025-26 நிதியாண்டில் பணியாளர் நியமனம் சற்று அதிகரித்தாலும், நிறுவனங்கள் எச்சரிக்கையுடனேயே செயல்பட்டு வருகின்றன; மேலும் குறிப்பிட்ட சில பிரிவுகளில் வேலை குறைப்புகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *