டெக் உலகில் முரட்டு கூட்டணி!!!
ஒப்பந்த முறையில் சிப் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தொழிற்சாலைகளுக்கு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை கொண்டு வருவதற்காக, ஃபாக்ஸ்கானுடன் கூட்டணி அமைத்துள்ளதாக என்விடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபாக்ஸ்கானின் தொழில்நுட்ப தினமான கடந்த வெள்ளி அன்று, என்விடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங்கின் மகனான ஸ்பென்சர் ஹுவாங் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் என்விடியாவின் முக்கிய ரோபாட்டிக்ஸ் தயாரிப்பு பிரிவின் மேலாளர் ஆவார்.
என்விடியாவுடன் இணைந்து, $140 கோடி செலவில் கட்டமைக்கப்படும் அதன் சூப்பர் கம்ப்யூட்டிங் மையம் 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் தயாராக இருக்கும் என்று ஃபாக்ஸ்கான் தெரிவித்துள்ளது. இந்த மையம் தைவானின் மிகப்பெரிய மேம்பட்ட GPU கிளஸ்டராக இருக்கும்.
27 மெகாவாட் திறன் கொண்ட இந்த டேடா மையம், என்விடியாவின் புதிய பிளாக்வெல் GB300 சிப்களால் இயக்கப்படும். இது ஆசியாவின் முதல் GB300 AI டேடா மையமாகவும் இருக்கும் என்று AI சூப்பர் கம்ப்யூட்டிங் மற்றும் கிளவுட் செயல்பாடுகளுக்காக ஃபாக்ஸ்கான் நிறுவியுள்ள Visonbay.ai என்ற புதிய பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி நியோ யாவ் கூறினார்.
”GPU தொழில்நுட்பம் துரிதப்படுத்தப்படுவதால், தனிப்பட்ட, ஒற்றை பயன்பாட்டிற்கான மையங்களை உருவாக்குவது இனி கட்டுபடியாகாது” என்று Nvidia துணைத் தலைவர் அலெக்சிஸ் ஜோர்லின் கூறினார்.
என்விடியா, OpenAI மற்றும் Uber உள்ளிட்ட ஃபாக்ஸ்கானின் கூட்டாளிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்ட, ஒப்பந்த அடிப்படையிலான எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளரின் தொழில்நுட்ப நாளில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. கணினி வளங்களை வாடகைக்கு எடுப்பது சிக்கனமான செயல்பாடாக இனி இருக்கும் என்று ஜோர்லின் கூறினார்.
“இறையாண்மை AI” அல்லது உள்நாட்டு தரவு, உள்கட்டமைப்பு மற்றும் திறமையைப் பயன்படுத்தி AI அமைப்புகளை உருவாக்கி நிர்வகிக்கும் திட்டத்திற்கு இது மையமாக உள்ளது என்று நியோ யாவோ கூறினார்.
என்விடியாவின் GB200 GPU அமைப்புகளுடன் கூடிய நான்கு AI சர்வர் ரேக்குகளை ஃபாக்ஸ்கானுடன் ஏற்கனவே பயன்படுத்தியுள்ளது என்று கூறினார்
