Latest:
2026-ல் ரூ. 1 லட்சம் கோடியைக் கடக்கவுள்ள இந்தியாவின் IPO நிதி திரட்டல்தொழில்நுட்ப நிறுவனங்களை கையகப்படுத்த ஹீரோ மோட்டார்ஸ் திட்டம்ஜெர்மன் கடன் பத்திரங்களின் வருவாய் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்புகிரெடிட் சூஸெ AT1 பத்திரங்கள் வழக்குகளில் HDFC வங்கி வெற்றிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும் – பாகம் 2Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 2அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணி2026-ல் ரூ. 1 லட்சம் கோடியைக் கடக்கவுள்ள இந்தியாவின் IPO நிதி திரட்டல்தொழில்நுட்ப நிறுவனங்களை கையகப்படுத்த ஹீரோ மோட்டார்ஸ் திட்டம்ஜெர்மன் கடன் பத்திரங்களின் வருவாய் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்புகிரெடிட் சூஸெ AT1 பத்திரங்கள் வழக்குகளில் HDFC வங்கி வெற்றிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும் – பாகம் 2Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 2அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணி

உள்நாட்டு செய்திகள்

மஹிந்திராவின் பலே திட்டம்..!! நடக்குமா???

2027அல்லது 2028இல், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் SUV விற்பனையில் 20%-25% மின்சார வாகனங்களாக இருக்கும் என்று அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. தற்போது இது 8%ஆக உள்ளது.

ஜனவரி 2026 இல் விற்பனைக்கு வரும் அதன் ஏழு இருக்கைகள் கொண்ட மின்சார SUV XEV 9S மற்றும் பிற மாடல்கள் மூலம் இந்த அதிகரிப்பை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அத்துடன் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

மெதுவான தொடக்கத்திற்குப் பிறகு, இந்தியாவின் EV வாகனங்களுக்கு மாறும் போக்கு வேகம் பெற்று வருகிறது. அரசாங்க தரவுகளின்படி, கடந்த ஆண்டு 23,000 யூனிட்டுகளுக்கு மேல் இருந்த மின்சார கார்களின் விற்பனை இந்த ஆண்டு 100,000 யூனிட்டுகளைத் தாண்டியுள்ளது.

“2027 மற்றும் 2028க்கு இடையில் எங்கள் போர்ட்ஃபோலியோவில் குறைந்தது 20-25% மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று மஹிந்திரா & மஹிந்திராவின் ஆட்டோ மற்றும் விவசாய துறைகளின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஜெஜுரிகர் கூறினார். மஹிந்திரா வாடிக்கையாளர்களில் கிட்டத்தட்ட 60% பேர் 500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு மின்சார கார்களில் பயணம் செய்கின்றனர்.

மஹிந்திராவின் மின்சார SUV வாகனங்களான BE6 மற்றும் XEV 9e ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்ட ஏழு மாதங்களுக்குள் 30,000 யூனிட்களைத் தாண்டி, ரூ.8,000 கோடி வருவாயை ஈட்டித் தந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

XEV 9S உட்பட அதிகரித்து வரும் மின்சார வாகனத் தேவையைப் பூர்த்தி செய்ய, மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைலின் தொழிற்சாலையின் உற்பத்தி அளவு, மாதத்திற்கு 4,500-5,000 யூனிட்டுகளிலிருந்து ஏப்ரல் 2026க்குள் 7,000 யூனிட்டுகளாக அதிகரிக்கப்படுகிறது. நீண்ட தூர மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க, 2027இன் இறுதிக்குள் 1,000 சார்ஜிங் பாயிண்டுகளை நிறுவ மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

XEV 9S இன் டாப்-எண்ட் வேரியண்டின் விலை ரூ.29.45 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்), 59 kWh, 70 kWh மற்றும் 79 kWh பேட்டரி தேர்வுகளுடன் விற்பனை செய்யபடுகிறது. இதன் அடிப்படை பதிப்பு ரூ.19.95 லட்சத்தில் தொடங்குகிறது. இந்த மாடல் உயர்நிலை வாகனங்களில் காணப்படும் தொழில்நுட்பம் மற்றும் சொகுசு அம்சங்களை கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *