Latest:
2026-ல் ரூ. 1 லட்சம் கோடியைக் கடக்கவுள்ள இந்தியாவின் IPO நிதி திரட்டல்தொழில்நுட்ப நிறுவனங்களை கையகப்படுத்த ஹீரோ மோட்டார்ஸ் திட்டம்ஜெர்மன் கடன் பத்திரங்களின் வருவாய் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்புகிரெடிட் சூஸெ AT1 பத்திரங்கள் வழக்குகளில் HDFC வங்கி வெற்றிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும் – பாகம் 2Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 2அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணி2026-ல் ரூ. 1 லட்சம் கோடியைக் கடக்கவுள்ள இந்தியாவின் IPO நிதி திரட்டல்தொழில்நுட்ப நிறுவனங்களை கையகப்படுத்த ஹீரோ மோட்டார்ஸ் திட்டம்ஜெர்மன் கடன் பத்திரங்களின் வருவாய் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்புகிரெடிட் சூஸெ AT1 பத்திரங்கள் வழக்குகளில் HDFC வங்கி வெற்றிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும் – பாகம் 2Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 2அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணி

உள்நாட்டு செய்திகள்

மேலும் ஒரு IPO..!! செபி ஒப்புதல்..!!

ஐசிஐசிஐ புருடென்ஷியல் சொத்து மேலாண்மை நிறுவனம் (ஏஎம்சி), இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திடம் (செபி), முதல் கட்ட பொதுப் பங்கு வெளியீட்டை (ஐபிஓ) தொடங்க ஒப்புதல் பெற்றுள்ளது.

செபி ஒப்புதல் பெறப்பட்டுள்ளதால், ஐசிஐசிஐ புருடென்ஷியல் ஏஎம்சி ஐபிஓ, டிசம்பர் இரண்டாவது வாரத்தில் சந்தைக்கு வர வாய்ப்புள்ளது. இந்நிறுவனம் $1,200 – $1,250 கோடி மதிப்பீட்டை எதிர்பார்க்கிறது.

நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்களின் அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய ஏஎம்சியான இந்நிறுவனத்தில், பிரிட்டனின் புருடென்ஷியல் பிஎல்சி வசம் உள்ள பங்குகளை விற்பனைக்கான திட்டமாக இந்த ஐபிஓ இருக்கும்.

அக்டோபர் 31, 2025 நிலவரப்படி, ஐசிஐசிஐ ஏஎம்சி ₹10,64,220 கோடிக்கும் அதிகமான, நிர்வாகத்தின் கீழான சொத்துகளை (AUM) கொண்டுள்ளது. முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 1.57 கோடிக்கும் அதிகமாக உள்ளது.

இந்த நிறுவனம் தனது வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸை (DRHP) நான்கு மாதங்களுக்கு முன்பு ஜூலை 8 அன்று செபியிடம் சமர்ப்பித்தது. இந்தத் திட்டத்தில் புருடென்ஷியல் 176.5 கோடி பங்குகளை அல்லது 10% பங்குகளை விற்பனை செய்வதாகக் கூறியது. இந்த கூட்டு நிறுவனத்தில் ஐசிஐசிஐ வங்கி 51% பங்குகளை வைத்திருக்கிறது. மீதமுள்ளதை இங்கிலாந்தை தளமாகக் கொண்ட புருடென்ஷியல் வைத்திருக்கிறது.

ஐசிஐசிஐ புருடென்ஷியல் ஏஎம்சி தனது ஐபிஓவைத் தொடங்கினால், ஐசிஐசிஐ வங்கி, ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி, ஐசிஐசிஐ லம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் ஆகியவற்றிற்குப் பிறகு இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடும் ஐந்தாவது குழும நிறுவனமாக இது மாறும்.

ஐசிஐசிஐ வங்கி, ஐபிஓ நிறைவடைவதற்கு முன்பு, பிசிஎச்எல் நிறுவனத்திடமிருந்து, நிறுவனத்தின் ஐபிஓவுக்கு முந்தைய பங்கு மூலதனத்தில் 2% வரை வாங்குவதற்கு ஒரு ஒப்பந்தம் செய்துள்ளதாக ஜூலை 9-இல் அறிவித்திருந்தது.

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் மற்றும் சிட்டிகுரூப் ஆகியவற்றால் வழிநடத்தப்பட்டு, மேலும் 16 வங்கிகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இந்த பங்கு வெளியீடு, இந்தியா இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஐபிஓ சிண்டிகேட் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *