Latest:
தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைஜூலையில் NBFC-களின் கடன் வளர்ச்சி 14.9% ஆக அதிகரிப்புவளர்ச்சியை அதிகரிக்க புதிய திட்டத்தை முன்னெடுக்கும் காரட்லேன்அமுல்: இந்தியாவின் வெண்மைப் புரட்சியைத் தூண்டிய கூட்டுறவு நிறுவனம்Amul: The Cooperative That Sparked India’s White Revolutionடெரிவேட்டிவ்ஸ் செட்டில்மென்ட் விலை முறையை மறுஆய்வு செய்யும் செபி5 நிமிடங்களில் ₹1 லட்சத்தை ₹44 லட்சமாக மாற்றிய கதையாடலின் பின்னணிThe Viral Claim of Turning ₹1 Lakh into ₹44 Lakh in 5 Minutes: Anatomy of Sensex’s Closing Auction Volatilityதங்கம் தொடர்பாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது ஒரு எச்சரிக்கை மணிதேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைஜூலையில் NBFC-களின் கடன் வளர்ச்சி 14.9% ஆக அதிகரிப்புவளர்ச்சியை அதிகரிக்க புதிய திட்டத்தை முன்னெடுக்கும் காரட்லேன்அமுல்: இந்தியாவின் வெண்மைப் புரட்சியைத் தூண்டிய கூட்டுறவு நிறுவனம்Amul: The Cooperative That Sparked India’s White Revolutionடெரிவேட்டிவ்ஸ் செட்டில்மென்ட் விலை முறையை மறுஆய்வு செய்யும் செபி5 நிமிடங்களில் ₹1 லட்சத்தை ₹44 லட்சமாக மாற்றிய கதையாடலின் பின்னணிThe Viral Claim of Turning ₹1 Lakh into ₹44 Lakh in 5 Minutes: Anatomy of Sensex’s Closing Auction Volatilityதங்கம் தொடர்பாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது ஒரு எச்சரிக்கை மணி

உள்நாட்டு செய்திகள்

நிஃப்டி நெக்ஸ்ட் 50இல் டாடா மோட்டர்ஸ் சி.வி, ஹெச்.டி.எப்.சி AMC

மார்ச் மாதத்தில் அரை ஆண்டு குறியீட்டு மறுசீரமைப்பு நடைபெறும்போது, டாடா மோட்டார்ஸ் வணிக வாகனங்கள், டாடா கேபிடல், ஐசிஐசிஐ புருடென்ஷியல் சொத்து மேலாண்மை நிறுவனம், முத்தூட் ஃபைனான்ஸ் மற்றும் எச்டிஎஃப்சி ஏஎம்சி அல்லது கம்மின்ஸ் இந்தியா ஆகியவை நிஃப்டி நெக்ஸ்ட் 50 எனப்படும் நிஃப்டி ஜூனியர் குறியீட்டில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக நுவாமா ஆல்டர்நேட்டிவ் & குவாண்டிடேட்டிவ் ரிசர்ச் தெரிவித்துள்ளது.

இந்த ஐந்து நிறுவங்களும் இன்ஃபோ எட்ஜ் (நௌக்ரி), பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ், ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி, ஹேவெல்ஸ் இந்தியா மற்றும் ஐசிஐசிஐ லோம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் ஜைடஸ் லைஃப் சயின்சஸ் ஆகியவற்றுக்கு மாற்றாக இருக்கலாம் என்று கூறுகிறது.

என்எஸ்இ குறியீடுகளின் மறுசீரமைப்பு மார்ச் மற்றும் செப்டம்பரில் ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறுகிறது. இந்த முறை நிஃப்டி 50 குறியீட்டில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்கவில்லை என்று நுவாமா ஆல்டர்னேட்டிவ் மேலும் கூறியது.

நிஃப்டி நெக்ஸ்ட் 50 இல் டாடா வணிக வாகனங்கள் சேர்க்கப்பட்டால் $14.3 கோடி அளவுக்கு சாத்தியமான முதலீடுகள் ஏற்படக்கூடும். அதே நேரத்தில் HDFC AMC நிறுவனத்திற்கு $8.1 கோடி முதலீடுகள் வரக்கூடும்.

மறுபுறம், பஜாஜ் ஹவுசிங், இன்ஃபோ எட்ஜ், ஹேவல்ஸ் ஆகியவற்றை விலக்குவது, நுவாமா அறிக்கையின் படி $1.4 கோடி முதல் $8 கோடி வரை வெளியேற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா, லென்ஸ்கார்ட், க்ரோவ், மீஷோ, எம்சிஎக்ஸ், லாரஸ் லேப்ஸ் ஆகியவை நிஃப்டி மிட்கேப் 100 குறியீட்டில் சேர்க்கப்படும் என்று நுவாமா ஆல்டர்நேட்டிவ் எதிர்பார்க்கிறது.

டாடா மோட்டார்ஸ் சிவியின் பங்குகளை வாங்குவதற்கு சமீபத்திய காலங்களில் ஏராளமான முதலீட்டாளர்கள் மற்றும் தரகு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. வணிக வாகன துறை வளர்ச்சியடைந்து வருவதால், இந்த பங்கு ₹560 வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 thoughts on “நிஃப்டி நெக்ஸ்ட் 50இல் டாடா மோட்டர்ஸ் சி.வி, ஹெச்.டி.எப்.சி AMC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *