22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
உள்நாட்டு செய்திகள்

TCSயின் அடுத்த அதிரடி கணக்கு!!

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தொடங்கியுள்ள டேடா மைய பிரிவான HyperVault இன் மூலம் நிறுவன சேவைகளை வழங்க, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற மைக்ரோசாஃப்ட், அமேசான் வெப் சர்வீசஸ் (AWS), கூகுள் மற்றும் என்விடியா ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

HyperVault-க்கான ஒரு முக்கிய வாடிக்கையாளராக OpenAI-ஐ இணைத்துக்கொள்ளவும், நிறுவன வாடிக்கையாளர்களுக்கான முகவர் AI தீர்வுகளை கூட்டாக உருவாக்கவும் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

TCS இந்த பெரும் நிறுவனங்களுடன் ஏற்கனவே உறவுகளைக் கொண்டுள்ளது. இப்போது அந்த உறவுகளை அதன் தரவு மைய வணிகத்திற்கு கொண்டு வர விரும்புகிறது என்று கருதப்படுகிறது. TCS மைக்ரோசாப்ட் மற்றும் கூகுளுடனான ஒப்பந்தங்களை இறுதி செய்து வருகிறது. என்விடியாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

”இவை அனைத்தையும் HyperVault-ஐ சந்தைப்படுத்தும் உத்தியின் ஒரு பகுதியாக TCS முன்னெடுத்துள்ளது. என்விடியாவுடனான ஒப்பந்தம் OpenAI-யுடன் செய்யப்பட்டதைப் போலவே இருக்கும்”என்று துறைசார் நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தங்கள் அடுத்த ஒரு காலாண்டு கால கட்டத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் OpenAI நிறுவனத்தின் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதன் AI கருவிகளின் விரிவான பயன்பாட்டு நிகழ்வுகளின் வளர்ந்து வரும் சுமையையும் ஆதரிக்க, OpenAI இந்தியாவில் தரவு மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக கடந்த பிப்ரவரியில் தகவல் வெளியானது.

இந்த ஆண்டு மே மாதம், இந்திய ChatGPT Enterprise, ChatGPT Edu மற்றும் OpenAI API தள பயனர்களின் தரவுகள் இனி இந்தியாவில் சேமிக்கப்படும் என்று OpenAI கடந்த மே மாதம் அறிவித்திருந்தது.

தனியார் முதலீட்டு நிறுவனமான TPG-யிலிருந்து TCS 100 கோடி டாலர் முதலீட்டை பெற்றுள்ளது. இதன் மூலம் அதன் தரவு மைய வணிகமான HyperVault-ஐ வளர்த்தெடுக்க திட்டமிட்டுள்ளது.

அடுத்த சில ஆண்டுகளில் TCS மற்றும் TPG இணைந்து ரூ.18,000 கோடி வரை முதலீடு செய்யும். இதில், TPG ரூ.8,820 கோடி வரை முதலீடு செய்யும். மேலும் 27.5 சதவீதம் முதல் 49 சதவீதம் வரை HyperVault-ல் வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *