Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு

உள்நாட்டு செய்திகள்

ஆலமரமாக இன்னும் வளரும் டாடா :

ஒடிசாவை தளமாகக் கொண்ட திரிவேணி பெல்லெட்ஸில், 50.01% பங்குகளை டாடா ஸ்டீல் நிறுவனம் வாங்க உள்ளது. இதன் நிதி மற்றும் பரிவர்த்தனை விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த கொள்முதல், டாடா ஸ்டீலின் மூலப்பொருள் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும். இரும்புத் தாது துகள்கள், எஃகு உற்பத்தி செய்ய கோக்கிங் நிலக்கரியுடன், வெடிப்பு உலைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

திரிவேணி பெல்லெட்ஸின் ஒரு அங்கமான பிராமணி ரிவர் பெல்லெட்ஸ் நிறுவனம், ஒடிசாவின் ஜாஜ்பூரில் ஆண்டுக்கு 40 லட்சம் டன் உற்பத்தி திறன் கொண்ட பெல்லெட் ஆலையை இயக்குகிறது. இது டாடா ஸ்டீலின் கலிங்காநகர் ஆலை மற்றும் சில ஆண்டுகளுக்கு முன்பு டாடா ஸ்டீல்ஸ் வாங்கிய நீலாச்சல் இஸ்பத் நிகாமுக்கு அருகில் உள்ளது.

கையகப்படுத்தலுக்குப் பிறகு, திரிவேணி பெல்லெட்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் லாயிட்ஸ் மெட்டல்ஸ் & எனர்ஜி இடையே ஒரு கூட்டு முயற்சியாக மாறும். லாயிட்ஸ் மெட்டல்ஸ் & எனர்ஜி நிறுவனம் சமீபத்தில் அட்லர் இண்டஸ்ட்ரியல் சர்வீசஸிடமிருந்து திரிவேணி பெல்லெட்ஸின் 49.99% பங்குகளை வாங்கியது.

நாட்டின் மிகப்பெரிய வணிக பெல்லெட் உற்பத்தியாளர்களில் ஒன்றான பிராமணி ரிவர் பெல்லெட்ஸ், ஒடிசாவின் பார்பிலில் 47 லட்சம் டன் இரும்புத் தாது சுத்தீகரிப்பு ஆலையை இயக்குகிறது. இரண்டு யூனிட்களும் ஒரு குழாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

2016 ஆம் ஆண்டில், டாடா ஸ்டீல் நிறுவனம், பிராமணி ரிவர் பெல்லட்ஸின் 100% பங்குகளை ₹900 கோடிக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாததால் 2017 இல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. டாடா ஸ்டீல்ஸ் அதன் கலிங்காநகர் ஆலையுடன் இதன் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க திட்டமிட்டிருந்தது.

2023-24இல், பிராமணி ரிவர் பெல்லட்ஸின் வருவாய் ₹2,473.91 கோடியாக இருந்தது. லாபம் ரூ.38.67 கோடியாக இருந்தது. இந்த நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் வணிக உற்பத்தியைத் தொடங்கியது .இந்தியாவின் இரும்புத் தாது உற்பத்தியில் பாதிக்கும் மேலான பங்கைக் கொண்ட ஒடிசாவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *