Latest:
இவெகோவிற்கான ஒரு பங்குக்கான விலையை €14.40-ஆக உயர்த்திய டாடா மோட்டார்ஸ்இந்திய வங்கி CEOகளில் அதிக ஊதியம் பெறும் HDFC வங்கியின் அனுப் பாக்ச்சிமெட்டா, மைக்ரோசாப்ட், மெக்டொனால்ட்ஸ் பங்குகளை வாங்கிய டிரம்ப்ஜப்பானில் IPO மூலம் திரட்டப்பட்ட நிதி 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவுPERM, H-1B விசா நெருக்கடி: இந்திய IT நிறுவனங்களுக்கான பின்விளைவுகள்The PERM Announcement and H-1B Visa Crisis: Ramifications for Indian Tech Companies2027இல் குடும்பங்களின் பணவீக்க எதிர்பார்ப்பு 10%ஐ எட்டியுள்ளதாக RBI தகவல்TCSஇன் காலாண்டு நிகர லாபம் 15% உயர்ந்து ரூ. 13,884 கோடியாக அதிகரிப்புTVS குழுமத்தில் குடும்ப ஒப்பந்தம் குறித்த கருத்து வேறுபாடுகளால் மோதல்அமெரிக்க கிரீன் கார்டு திட்டத்திலிருந்து 8 இந்திய IT நிறுவனங்கள் நீக்கம்இவெகோவிற்கான ஒரு பங்குக்கான விலையை €14.40-ஆக உயர்த்திய டாடா மோட்டார்ஸ்இந்திய வங்கி CEOகளில் அதிக ஊதியம் பெறும் HDFC வங்கியின் அனுப் பாக்ச்சிமெட்டா, மைக்ரோசாப்ட், மெக்டொனால்ட்ஸ் பங்குகளை வாங்கிய டிரம்ப்ஜப்பானில் IPO மூலம் திரட்டப்பட்ட நிதி 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவுPERM, H-1B விசா நெருக்கடி: இந்திய IT நிறுவனங்களுக்கான பின்விளைவுகள்The PERM Announcement and H-1B Visa Crisis: Ramifications for Indian Tech Companies2027இல் குடும்பங்களின் பணவீக்க எதிர்பார்ப்பு 10%ஐ எட்டியுள்ளதாக RBI தகவல்TCSஇன் காலாண்டு நிகர லாபம் 15% உயர்ந்து ரூ. 13,884 கோடியாக அதிகரிப்புTVS குழுமத்தில் குடும்ப ஒப்பந்தம் குறித்த கருத்து வேறுபாடுகளால் மோதல்அமெரிக்க கிரீன் கார்டு திட்டத்திலிருந்து 8 இந்திய IT நிறுவனங்கள் நீக்கம்

சர்வதேச செய்திகள்

பிரிட்டனில் வேலையின்மை விகிதம் 5.2%ஆக அதிகரிப்பு

கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, பிரிட்டனில் வேலையின்மை விதிதம் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தொழிலாளர் சந்தை தொடர்ந்து பலவீனமடைந்ததால் ஊதியங்களின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இதனால் பேங்க் ஆஃப் இங்கிலாந்த் எனப்படும் பிரட்டனின் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மேலும் குறைக்கும் என்று பங்கு சந்தை வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்து, அதற்கு ஏற்ப பங்கு சந்தை நிலைப்பாடுகளில் அதிகரித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டின் இறுதி காலாண்டில் வேலையின்மை விகிதம் 5.2% ஆக உயர்ந்தது. இது 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்த அளவை விட மிக அதிகமாகும். பொருளாதார வல்லுநர்கள் கணித்த 5.1% ஐ விட அதிகமாகும் என்று தேசிய புள்ளிவிவர அலுவலகம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது. பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் விருப்பமான ஊதியக் குறிகாட்டியான, தனியார் துறை ஊதிய வளர்ச்சி விகிதம் 3.4% ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகும்.

ஜனவரி மாதத்தில் வேலையில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 11,000 அளவுக்கு குறைந்துள்ளதாக வருமான வரி புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதனால் கடந்த ஒரு ஆண்டில் வேலை இழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,34,000 ஆக உள்ளது.

தொழிலாளர் சந்தையில் பணவீக்க அழுத்தங்கள் தளர்ந்து வருவதை இது சுட்டிக்காட்டுகிறது. இதனால் பேங்க் ஆஃப் இங்கிலாந்து கொள்கை வகுப்பாளர்கள் வட்டி விகிதங்களை மீண்டும் குறைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *