அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் 2 ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள்
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவிட்ட, அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் வழங்கப்படும் என்றும், அதில் ஒன்று நிறுவனத்தின் சார்பாகவும், மற்றொன்று தனது சொந்த பங்களிப்பாகவும் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் முன்னதாக வெளியிட்ட அறிவிப்பில், தற்போது செயல்பாட்டில் உள்ள ஒவ்வொரு ‘டிரம்ப் கணக்கிற்கும்’ (Trump Account) அதன் கிளாஸ் ஏ பொதுப் பங்குகளில் ஒன்றை வழங்குவதாகத் தெரிவித்தது. மேலும், நிறுவனம் வழங்கும் அதே எண்ணிக்கையிலான பங்குகளை, எலான் மஸ்க்கும் தனது சொந்த பங்களிப்பாக வழங்குவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் வழங்கும் இந்த ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் ‘டிரம்ப் கணக்குகளுடன்’ இணைக்கப்படுமா அல்லது இந்தப் பங்குகளை விற்பனை செய்ய முடியாத கால அவகாசம் (lockup period) ஏதேனும் விதிக்கப்படுமா என்பது குறித்த கேள்விக்கு, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உடனடியாக எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
கடந்த அக்டோபர் மாதம், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் குவின் ஷாட்வெல் மற்றும் அவரது கணவர் ஆகியோர், ‘டிரம்ப் முன்னெடுப்பின்’ (Trump initiative) கீழ், 20 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்குத் தலா ஒரு ஸ்பேஸ்எக்ஸ் பங்கை வழங்குவதாக உறுதியளித்திருந்தனர்.
அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தனது ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளில் ஒன்றை வழங்குவதாக எலான் மஸ்க் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மஸ்க், “அடுத்த ஆண்டு, அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் எனது ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளில் ஒன்றை வழங்கப்போகிறேன். இது போன்ற பல முன்னெடுப்புகளில் இது முதலாவதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், “எதிர்கால பொருளாதாரத்தில் பங்குகளைக் குறிக்கும் இந்த பங்குகளை, நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதே சரியான வழியாகும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
