Latest:
Brands that Built India: Lupin Pharma – From a ₹5,000 Loan to a Global Healthcare Powerhouseஇந்தியாவைக் கட்டியெழுப்பிய பிராண்டுகள் - உலகளாவிய சுகாதாரத் துறை ஜாம்பவானாக உயர்ந்த லூபின் பார்மா7.19%-ஐ எட்டிய 10 ஆண்டு கால அரசுப் பத்திரத்தின் வருவாய் (yield)MDR காரணமாக ஆண்டுக்கு ₹7,000-9,000 கோடி கூடுதல் சுமைSproutlife Foods நிறுவனத்தை முழுமையாகக் கையகப்படுத்திய ITCAI ஏஜெண்டுகளை கட்டுப்படுத்தும் என்விடியாவின் பாதுகாப்பு மென்பொருள் கருவிகள்வங்கித் துறையில் மிகப்பெரிய பாய்ச்சலாக அமையும் AIகிழக்கு இந்தியாவில் பால் பொருட்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் ITC2031க்குள் PV சந்தையில் 15% பங்கை எட்ட டாடா மோட்டார்ஸ் இலக்கு3 நாள் வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்த வங்கி ஊழியர் சங்கங்கள்Brands that Built India: Lupin Pharma – From a ₹5,000 Loan to a Global Healthcare Powerhouseஇந்தியாவைக் கட்டியெழுப்பிய பிராண்டுகள் - உலகளாவிய சுகாதாரத் துறை ஜாம்பவானாக உயர்ந்த லூபின் பார்மா7.19%-ஐ எட்டிய 10 ஆண்டு கால அரசுப் பத்திரத்தின் வருவாய் (yield)MDR காரணமாக ஆண்டுக்கு ₹7,000-9,000 கோடி கூடுதல் சுமைSproutlife Foods நிறுவனத்தை முழுமையாகக் கையகப்படுத்திய ITCAI ஏஜெண்டுகளை கட்டுப்படுத்தும் என்விடியாவின் பாதுகாப்பு மென்பொருள் கருவிகள்வங்கித் துறையில் மிகப்பெரிய பாய்ச்சலாக அமையும் AIகிழக்கு இந்தியாவில் பால் பொருட்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் ITC2031க்குள் PV சந்தையில் 15% பங்கை எட்ட டாடா மோட்டார்ஸ் இலக்கு3 நாள் வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்த வங்கி ஊழியர் சங்கங்கள்

உள்நாட்டு செய்திகள்

உணவு வணிகத் துறையில் தொடரப் போவதாக அறிவித்த HUL

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL) பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில், அதன் உணவு வணிகம் ஒரு முக்கியமான பிரிவாக தொடர்கிறது என்றும், உணவுப் பிரிவுகளை விற்பனை செய்வது குறித்து எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் அழகு, தனிநபர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுப் பிரிவுகளில் யூனிலீவர் தனது கவனத்தைக் கூர்மைப்படுத்துவதால், அதன் உணவுப் பிரிவுகளைப் பிரிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அல்லது பகுதியளவு விற்பனை செய்ய உள்ளதாகவும் ப்ளூம்பெர்க் அறிக்கை கூறியதைத் தொடர்ந்து, இதை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த ஊகங்கள் நுகர்வோர் பொருட்கள் துறையில் ஒரு பரந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கின்றன என்று தொழில் வல்லுநர்கள் கூறுகின்றனர். இத்துறையில், அழகு மற்றும் நல்வாழ்வுப் பிரிவுகள் வேகம் பெற்று வரும் வேளையில், பொட்டலமிடப்பட்ட உணவு வணிகங்கள் மெதுவான வளர்ச்சியை எதிர்கொள்கின்றன. மேலும், ஓசெம்பிக் மற்றும் வெகோவி போன்ற GLP-1 எடை குறைப்பு மருந்துகளின் எழுச்சி, அதிக கலோரி கொண்ட உணவுகளுக்கான தேவையை மேலும் குறைத்துள்ளது.

HUL இத்தகைய முதலீட்டு விலக்கல் பற்றிய கணிப்புகளை மறுத்தாலும், பேச்சு, அதன் இந்திய வணிகம் ஏற்கனவே ஆடம்பரப் பண்டங்களைத் தாண்டி, அன்றாடப் பயன்பாட்டைக் கொண்ட சக்திவாய்ந்த பிராண்டுகளை மையமாகக் கொண்ட ஒரு இறுக்கமான தயாரிப்புத் தொகுப்பை நோக்கித் திரும்பியுள்ளது.

பிப்ரவரி 2026-ல் குவாலிட்டி வால்ஸ் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தின் பிரிவினை மற்றும் பங்குச் சந்தைப் பட்டியலைத் தொடர்ந்து, இந்நிறுவனம் மேக்னம் மற்றும் கார்னெட்டோ போன்ற உயர்தர உறைந்த இனிப்பு வகைகளிலிருந்து வெளியேறியது. இதன் விளைவாக, ஊட்டச்சத்து (ஹார்லிக்ஸ், பூஸ்ட்), சமையல் (நோர், கிஸ்ஸான், ஹெல்மேன்ஸ், அன்னபூர்ணா), மற்றும் பானங்கள் (புரூக் பாண்ட் தேநீர் மற்றும் ப்ரூ காபி) ஆகிய மூன்று தூண்களை மையமாகக் கொண்ட, சுருக்கப்பட்ட உணவு மற்றும் குளிர்பானங்களின் தயாரிப்புத் தொகுப்பு உருவானது.

“உணவுப் பொருட்கள் தொடர்ந்து இநிறுவனத்தின் மையப் பகுதியாகத் திகழ்ந்தாலும், நுகர்வோரின் மாறிவரும் நடத்தைகள், சுகாதாரப் போக்குகள் மற்றும் உலகளாவிய நுகர்வோர் பொருட்கள் சந்தையில் வளர்ச்சி வாய்ப்புகளைப் புதிதாக வரையறுக்கும் புதிய தேவைகள் ஆகியவற்றின் காரணமாக, இத்துறைப் பிரிவு மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது,” என்று அத்துறைசார் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *