Latest:
RBIயின் FCNR(B) ஸ்வாப் வசதியின் கீழ் ரூ. 34,000 கோடியைத் திரட்டிய IDFC ஃபர்ஸ்ட் வங்கிஇவெகோ பங்குகளை வாங்க டாடா மோட்டர்ஸுக்கு இத்தாலி ஒப்புதல்₹1,800 கோடி முதலீட்டில் வயர்கள், கேபிள்கள் உற்பத்தியை துவங்கும் அல்ட்ராடெக் சிமெண்ட்மெர்க்கின் புற்றுநோய் மருந்தின் பயோசிமிலர் பதிப்பை அமெரிக்கச் சந்தையில் அறிமுகப்படுத்தும் சிப்லாஷெல் ஒப்பந்தத்திற்காக ஆதித்யா பிர்லா குழுமத்திற்குத் ரூ. 24,000 கோடி வங்கிக் கடன்கென்யாவில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்த அதிபர் ரூட்டோ உத்தரவுசொந்த வெற்றிக்கு பலியாகியுள்ள SIP-கள் - ஒரு நம்பகமான முதலீட்டுத் தேர்வுSIPs - A Trusted Investment Option - Limited by Its Own Growthபிரதமர் மோடியின் வேண்டுகோளினால் செப்டம்பரில் தங்க இறக்குமதி 15% சரிய வாய்ப்புCAS நடைமுறைப்படுத்தலால் F&O வர்த்தக மதிப்பு ₹347 லட்சம் கோடியாக சரிவுRBIயின் FCNR(B) ஸ்வாப் வசதியின் கீழ் ரூ. 34,000 கோடியைத் திரட்டிய IDFC ஃபர்ஸ்ட் வங்கிஇவெகோ பங்குகளை வாங்க டாடா மோட்டர்ஸுக்கு இத்தாலி ஒப்புதல்₹1,800 கோடி முதலீட்டில் வயர்கள், கேபிள்கள் உற்பத்தியை துவங்கும் அல்ட்ராடெக் சிமெண்ட்மெர்க்கின் புற்றுநோய் மருந்தின் பயோசிமிலர் பதிப்பை அமெரிக்கச் சந்தையில் அறிமுகப்படுத்தும் சிப்லாஷெல் ஒப்பந்தத்திற்காக ஆதித்யா பிர்லா குழுமத்திற்குத் ரூ. 24,000 கோடி வங்கிக் கடன்கென்யாவில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்த அதிபர் ரூட்டோ உத்தரவுசொந்த வெற்றிக்கு பலியாகியுள்ள SIP-கள் - ஒரு நம்பகமான முதலீட்டுத் தேர்வுSIPs - A Trusted Investment Option - Limited by Its Own Growthபிரதமர் மோடியின் வேண்டுகோளினால் செப்டம்பரில் தங்க இறக்குமதி 15% சரிய வாய்ப்புCAS நடைமுறைப்படுத்தலால் F&O வர்த்தக மதிப்பு ₹347 லட்சம் கோடியாக சரிவு

உள்நாட்டு செய்திகள்

அக்னே குளோபலில் 20% பங்குகளை 2.85 கோடி டாலருக்கு வாங்கும் விப்ரோ

முன்னணி தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமான விப்ரோ, அதன் துணை நிறுவனமான விப்ரோ ஐடி சர்வீசஸ், மூலம் அக்னே குளோபல் நிறுவனத்தில் கூடுதலாக 20% பங்குகளை 2.85 கோடி டாலருக்கு வாங்கவுள்ளதாக அறிவித்தது. இந்த பரிவர்த்தனைக்குப் பிறகு, அந்நிறுவனத்தில் விப்ரோவின் மொத்தப் பங்குடைமை 80 சதவீதமாக உயரும்; இது இன்ஷூர்டெக் (காப்பீட்டுத் தொழில்நுட்பம்) சேவைத் துறையில் அதன் இருப்பை மேலும் வலுப்படுத்தும்.

இந்தப் பரிவர்த்தனை ஜூன் 5க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விப்ரோ தெரிவித்தது. அக்னே குளோபல் நிறுவனம், சொத்து மற்றும் விபத்துக் காப்பீட்டுத் துறைக்குத் தேவையான தொழில்நுட்பம், ஆலோசனை மற்றும் டிஜிட்டல் மாற்றச் சேவைகளை வழங்கி வருகிறது.

பங்குச் சந்தையில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தின்படி, இந்தப் பங்கு கொள்முதலுக்கான தொகை ரொக்கமாகச் செலுத்தப்படும்; மேலும் இது வழக்கமான இறுதிச் சரிசெய்தல்களுக்கு உட்பட்டதாகும். முன்னதாக, பிப்ரவரி 15, 2024 அன்று, விப்ரோ லிமிடெட் மற்றும் விப்ரோ ஐடி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் முறையே ‘அக்னே குளோபல் ஐடி செர்வீசஸ் மற்றும் அக்னே குளோபல் இன்க் ஆகியவற்றில் 60% பங்குகளை வாங்கியதாகவும், அப்பரிவர்த்தனை பிப்ரவரி 14, 2024 அன்று நிறைவடைந்ததாகவும் இந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

“தற்போது கூடுதலாக 20% பங்குகள் வாங்கப்படுகின்றன; இதன் மூலம் அக்னே குளோபல் இன்க் நிறுவனத்தில் விப்ரோ ஐடி சர்வீசஸின் ஒட்டுமொத்தப் பங்குடைமை 80 சதவீதமாக உயர்கிறது. இனி வரும் காலங்களில் ஏதேனும் கூடுதல் பங்குகள் வாங்கப்பட்டால், அது குறித்த தனி அறிவிப்பு வெளியிடப்படும்” என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

பங்குச் சந்தையில் தாக்கல் செய்த ஆவணத்தில், அக்னே நிறுவனத்தில் கூடுதலாகப் பங்குகளை வாங்குவது, காப்பீட்டுத் துறையில்—குறிப்பாகச் சொத்து மற்றும் விபத்துக் காப்பீட்டுப் பிரிவிற்கான செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அறிவுசார் சொத்துரிமை சார்ந்த மாற்றச் சேவைகளில்—விப்ரோவின் போட்டித்தன்மையை மேலும் வலுப்படுத்தும் என்று அந்தத் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பரிவர்த்தனைக்கு எந்தவொரு அரசு அல்லது ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதல்களும் தேவையில்லை என்று விப்ரோ மேலும் தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *