Latest:
The BRICS Taleபிரிக்ஸின் கதைசந்திரசேகரனை தலைவராகத் தொடர வைப்பது குறித்து டாடா சன்ஸ் நிர்வாகக் குழு ஆலோசனைசவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் முரளிதர் பை நியமனம்வட்டி விகிதங்களை உயர்த்திய அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கிUPI MDR கட்டண விதிப்பினால் பெரும் பலனடையும் கூகுள் பே, பேடியெம்AI கேமரா ஸ்டார்ட்அப் நிறுவனத்தை கையகப்படுத்திய OpenAIகிரே சந்தையில் 27% பிரீமியத்தை பெற்றுள்ள ஹீரோ மோட்டார்ஸ் IPOரூ.2,000க்கும் அதிக UPI பரிவர்த்தனைகளுக்கு 0.04% MDR கட்டணம் விதிப்புடிரைவேடிவ்ஸ் சந்தைக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த TCS-உடன் கூட்டு சேர்ந்துள்ள DGCXThe BRICS Taleபிரிக்ஸின் கதைசந்திரசேகரனை தலைவராகத் தொடர வைப்பது குறித்து டாடா சன்ஸ் நிர்வாகக் குழு ஆலோசனைசவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் முரளிதர் பை நியமனம்வட்டி விகிதங்களை உயர்த்திய அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கிUPI MDR கட்டண விதிப்பினால் பெரும் பலனடையும் கூகுள் பே, பேடியெம்AI கேமரா ஸ்டார்ட்அப் நிறுவனத்தை கையகப்படுத்திய OpenAIகிரே சந்தையில் 27% பிரீமியத்தை பெற்றுள்ள ஹீரோ மோட்டார்ஸ் IPOரூ.2,000க்கும் அதிக UPI பரிவர்த்தனைகளுக்கு 0.04% MDR கட்டணம் விதிப்புடிரைவேடிவ்ஸ் சந்தைக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த TCS-உடன் கூட்டு சேர்ந்துள்ள DGCX

உள்நாட்டு செய்திகள்

சிறப்பு மருந்து வணிகத்தின் வளர்ச்சியால் சன் ஃபார்மாவின் லாபம் அதிகரிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனமான சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ், பாரம்பரிய ஜெனரிக் மருந்துகளுக்கு அப்பால் அதன் வணிகத்தை விரிவுபடுத்தி வரும் நிலையில், அதிக லாபம் தரும் சிறப்பு மருந்து (specialty medicines) வணிகத்தின் வலுவான வளர்ச்சியால் அதன் முதல் காலாண்டு லாபத்தில் 27% உயர்வைப் பதிவு செய்தது.

அமெரிக்காவின் ஜெனரிக் மருந்துச் சந்தையில் நிலவும் விலை நிர்ணய அழுத்தத்தை ஈடுசெய்ய உதவும் வகையில், சிறப்பு மருந்து வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான சன் ஃபார்மாவின் முயற்சிகளை இந்த முடிவுகள் பிரதிபலிக்கின்றன.

அதிக லாபம் ஈட்டித்தரும் இந்த மருந்துத் தொகுப்பில் தோல் நோய்கள், புற்றுநோய் மற்றும் பிற நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சைகள் அடங்கும்.

சிறப்பு மருந்துகளின் விற்பனை 12.8% அதிகரித்து 35.1 கோடி டாலராக உயர்ந்தது; இது நிறுவனத்தின் மொத்த வருவாயில் 21.9% ஆகும். இந்நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையான இந்தியாவில் 16% வளர்ச்சி ஏற்பட்டதே இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது; அதே சமயம் அமெரிக்கச் சந்தையில் விற்பனை ஏறக்குறைய மாற்றமின்றி இருந்தது.

“இந்தக் காலாண்டில் சன் ஃபார்மாவின் இந்திய வணிகமே வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக இருந்துள்ளது; சிறப்பு மருந்துப் பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தயாரிப்புகளே இந்த வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தன,” என்று சிஸ்டமேட்டிக்ஸ் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸின் மருந்துத் துறை ஆய்வாளர் விஷால் மன்சந்தா கூறினார்.

“இந்தியாவில் புதிய தயாரிப்புகளைச் சந்தைக்குக் கொண்டு வருவதில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் சன் ஃபார்மாவும் ஒன்று; இது விலையை நிர்ணயிப்பதிலும் அவர்களுக்கு ஒரு கூடுதல் சாதகத்தை அளிக்கிறது” என்று மன்சந்தா குறிப்பிட்டார்.

மேலும், நிறுவனங்கள் கையகப்படுத்தல் மூலமாகவும் சன் ஃபார்மா வெளிநாடுகளில் தனது வணிகத்தை விரிவுபடுத்தி வருகிறது. இதில் ஆர்கனான் நிறுவனத்தை 1,175 கோடி டாலருக்கு வாங்குவதற்கான திட்டமும் அடங்கும்; இது ஒரு இந்திய மருந்து நிறுவனம் மேற்கொள்ளும் மிகப்பெரிய சர்வதேச அளவிலான வணிக ஒப்பந்தமாக அமையும்.

ஜூன் 30-ல் முடிவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் முந்தைய ஆண்டின் ரூ.2,279 கோடியிலிருந்து ரூ.2,895 கோடியாக உயர்ந்தது; அதே வேளையில் வருவாய் 10.5% அதிகரித்து ரூ.15,300 கோடியாக இருந்தது. LSEG தரவுகளின்படி, ஆய்வாளர்கள் ரூ.2,990 கோடி லாபத்தை எதிர்பார்த்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *