ஐடிசியின் ‘கார்ட் லுமினா காப்பியர்’ (Carte Lumina Copier) அறிமுகம்
ஐடிசி நிறுவனத்தின் ‘பேப்பர்போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷாலிட்டி பேப்பர்ஸ் பிரிவு, ‘கார்ட் லுமினா காப்பியர்’ (Carte Lumina Copier) எனும் உயர்தர தயாரிப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம், நகல் எடுக்கும் காகித சந்தையில் அதன் இருப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இந்நிறுவனத்திடம் உள்ள நகல் எடுக்கும் காகித வரிசையுடன், தற்போது ‘கார்ட் லுமினா’ (Carte Lumina) பிராண்ட் இந்த பிரிவில் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ‘கார்ட் லுமினா ரீகல்’ (Carte Lumina Regal – 75 GSM) மற்றும் ‘கார்ட் லுமினா ப்ளூ’ (Carte Lumina Blue – 70 GSM) என இரண்டு பிரீமியம் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து ஐடிசி நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விரிவான ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட இந்த காகிதங்கள், 95-க்கும் அதிகமான ISO பிரைட்னஸ் (ISO Brightness) மற்றும் 160-க்கும் அதிகமான CIE ஒயிட்னஸ் (CIE Whiteness) அளவுகளைக் கொண்டுள்ளன. இவை சிறந்த உறுதித்தன்மையுடன், மிகச்சிறந்த அச்சுத் தரத்தையும், சீரான செயல்பாட்டையும், மென்மையான மற்றும் நம்பகமான அச்சு அனுபவத்தையும் வழங்குகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிமுகத்தை முன்னிட்டு, பேட்மிண்டன் சாம்பியன் பி.வி. சிந்து இடம்பெறும் விளம்பரப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. சிறந்து விளங்க வேண்டும் என்ற அவரது தேடலும், தொடர்ந்து தரத்தை மேம்படுத்தும் அவரது அர்ப்பணிப்பும், இந்த புதிய தயாரிப்பின் தாரக மந்திரமான “சாம்பியன்களுக்காக, ஒரு சாம்பியனால் உருவாக்கப்பட்டது” என்பதோடு ஒத்துப்போகிறது.
இந்த அறிமுகம் குறித்து ஐடிசி நிறுவனத்தின் பேப்பர்போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷாலிட்டி பேப்பர்ஸ் பிரிவு தலைமை நிர்வாகி ராஜேஷ் பொன்னுரு கூறுகையில், “நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள ‘கார்ட் லுமினா காப்பியர்’, இந்த சந்தையில் ஒரு புதிய தரநிலையை உருவாக்கும் நோக்கம் கொண்டது. ஆழ்ந்த தொழில்நுட்ப நிபுணத்துவம், மேம்பட்ட உற்பத்தி முறைகள் மற்றும் தரத்தின் மீதான தொடர்ச்சியான கவனம் ஆகியவற்றின் மூலம், வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த மதிப்பையும், மேம்பட்ட அச்சு அனுபவத்தையும் வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.
உயர்தர தயாரிப்புகள், வலுவான வாடிக்கையாளர் உறவுகள் மற்றும் தொடர்ச்சியான புத்தாக்கம் ஆகியவற்றின் மூலம், நகல் எடுக்கும் காகித சந்தையில் அதன் நிலையை வலுப்படுத்த ஐடிசி கொண்டுள்ள லட்சியத்தில், இந்த அறிமுகம் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.
