22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
உள்நாட்டு செய்திகள்

இந்தியாவில் சீன கார் ஆதிக்கம்..!!

சீன கார் தயாரிப்பாளரான BYD இந்தியாவின் மின்சார வாகன (EV) விற்பனையில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த ஆண்டு இதுவரை அதன் விற்பனை சுமார் 80% அதிகரித்துள்ளது.

வாகன் போர்ட்டலின் சமீபத்திய தரவுகளின்படி, ஜனவரி 1 முதல் நவம்பர் 30 வரை, BYD, 5,121 வாகனங்களை பதிவு செய்துள்ளது, 2024இல் இது 2,870 யூனிட்களாக இருந்தது. அதே காலகட்டத்தில், இந்தியாவின் மின்சார நான்கு சக்கர வாகனத் துறை 1,60,000 யூனிட் விற்பனையுடன் 60% வளர்ச்சியடைந்தது.

BYD இன் வளர்ச்சிக்கு இரண்டு காரணிகள் பங்களித்துள்ளன. முதலாவதாக, நிறுவனம் நாட்டில் அதன் தடத்தை விரிவுபடுத்துகிறது. 2023 மற்றும் 2025 க்கு இடையில், அதன் மொத்த விற்பனை நிலையங்கள் கிட்டத்தட்ட இரு மடங்காக 47 ஆக உயர்ந்துள்ளன.

இரண்டாவதாக அதன் சில மாடல்கள் ஹோமோலோகேஷன் செய்யப்பட்டதால் இறக்குமதி வரம்புகள் தளர்த்தப்பட்டுள்ளன. சீனாவில் இருந்து அதிக கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது.

இரண்டு மாடல்கள் – அட்டோ 3 மற்றும் இமேக்ஸ் 7 – ஹோமோலோகேஷன் சான்றிதழ்களைப் பெற்றுள்ளதாக லேண்ட்மார்க் கார்ஸின் தலைவர் சஞ்சய் தக்கர் நவம்பர் 12 அன்று ஒரு வருவாய் அழைப்பின் போது தெரிவித்தார்.

அதன் சிறந்த விற்பனையான மாடல்களில் ஒன்றாக வளர்ந்து வரும் சீலியனுக்கான செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இந்திய சாலைகளில் இயங்குவதற்கு ஏற்றதாக வாகன மாடல்கள் கருதுவதற்கான சான்றிதழ் செயல்முறையே ஹோமோலோகேஷன் ஆகும். இந்திய விதிகளின்படி, சர்வதேச ஹோமோலோகேஷன் சான்றிதழைப் பெற்ற, ஆனால் இந்தியாவில் அது இல்லாத ஒவ்வொரு மாடலுக்கும் ஆண்டுக்கு சுமார் 2,500 யூனிட்களை இறக்குமதி செய்யலாம். இந்தியாவில் ஹோமோலோகேஷன் முடிந்த பிறகு, எத்தனை கார்களை கொண்டு வர முடியும் என்பதற்கு வரம்பு இல்லை.

ஹென்சென் தலைமையிடமாகக் கொண்ட BYD சீனாவின் முன்னணி மின்சார கார் தயாரிப்பாளராகும். 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய விற்பனை 42 லட்சம் யூனிட்களாக இருந்தது. 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், இது 21.1 லட்சம் யூனிட்களை விற்றது.

இந்தியாவில், அதன் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தாலும், ஹூண்டாயை விட, கடந்த மூன்று மாதங்களில் மின்சார கார் விற்பனையில் விஞ்சியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *