22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
உள்நாட்டு செய்திகள்

LIC முதலீடு முடிவுகள்: நிதியமைச்சர் பதில் என்ன?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது அமைச்சகம், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்கு (LIC) அதன் முதலீட்டு முடிவுகள் குறித்து ஆலோசனை அல்லது வழிகாட்டுதல்களை வழங்குவதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் அதானி குழுமத்தில் எல்.ஐ.சி செய்த முதலீடுகள் நிறுவப்பட்ட விதிமுறைகளின் (SOP) படி செய்யப்பட்டவை என்று குறிபிட்டுள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி, பல ஆண்டுகளாக, நிறுவனங்களின் நிதி நிலை பற்றிய அடிப்படைகள் மற்றும் விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் முதலீட்டு முடிவுகளை எடுத்து வருகிறது. நிறுவப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகளை (SOPகள்) பின்பற்றி, ரூ.38,658.85 கோடி அளவுக்கு, அதானி குழுமத்தின் அரை டஜன் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்கியுள்ளது. மேலும் ரூ.9,625.77 கோடியை இந்த குழுமத்தின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளது.

“எல்ஐசியின் முதலீடுகள் தொடர்பாக நிதியமைச்சகம் எல்ஐசிக்கு எந்த ஆலோசனை/வழிகாட்டுதலையும் வழங்குவதில்லை” என்று நிர்மலா சீதாராமன் மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அரசுக்குச் சொந்தமான காப்பீட்டாளரின் முதலீட்டு முடிவுகளை, “கடுமையான ஆய்வுகள், இடர் மதிப்பீடு மற்றும் நம்பகத்தன்மை இணக்கத்தைப் பின்பற்றி எல்ஐசி மட்டுமே எடுக்கிறது என்று கூறினார்.

இத்தகைய முடிவுகள், 1938 ஆம் ஆண்டு காப்பீட்டுச் சட்டத்தின் விதிகளாலும், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI), இந்திய ரிசர்வ் வங்கி (RBI) , இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) (பொருந்தக்கூடிய இடங்களில்) அவ்வப்போது வெளியிடும் விதிமுறைகளாலும் நிர்வகிக்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.

அக்டோபர் மாதம், தி வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியான ஒரு அறிக்கை, நிதி அமைச்சக அதிகாரிகள் LICயை அதானி குழுவில் முதலீடு செய்யத் தூண்டியதால குற்றம் சாட்டியது. LIC மே 2025 இல், அதானி துறைமுகங்கள் மற்றும் SEZ (APSEZ) இல் 57 கோடி டாலர் (சுமார் ரூ. 5,000 கோடி) முதலீடு செய்ததை இந்த அறிக்கை சுட்டிக்க்காட்டியது.

“எல்.ஐ.சியின் நிர்வாகக் குழுவால், அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின்படி நிறுவப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) பின்பற்றி இது முன்னெடுக்கப்பட்டது” என்று நிர்மலா சீதாராமன் கூறினார். NSE மற்றும் BSE இல் பட்டியலிடப்பட்டுள்ள முதல் 500 நிறுவனங்களில் LIC முதலீடு செய்துள்ளது என்றும், அதன் முதலீட்டின் பெரும் பகுதி இவற்றில் பெரிய நிறுவனங்களில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *