22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
உள்நாட்டு செய்திகள்

ஏ.ஐ பாதிப்புகள் பற்றிய அச்சங்கள் மிகையானவை – டி.சி.எஸ் தலைவர்

ஏ.ஐ தொழில்நுட்பத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த அச்சங்கள் மிகையானவை என டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தலைவர் கீர்த்திவாசன் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் பிளக் இன்களின் அறிமுகத்தினால், உலக அளவில் சாப்வேர் நிறுவனங்களின் பங்கு விலைகள் கடந்த சில நாட்களில் வீழ்ச்சியடைந்து, முதலீட்டாளர்களுக்கு சுமார் 83,000 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பேட்டியளித்த டி.சி.எஸ் நிறுவன சி.இ.ஓ கீர்த்திவாசன், LLM எனப்படும் பெரிய மொழி மாடல்கள், எண்ட்ரர்பிரைஸ் சாப்ட்வேர்களை முற்றிலும் இல்லாமல் ஆக்கி, அதன் இடத்தை பிடித்து விடும் என்ற அச்சம் மிகையான, தவறான ஒன்று என்று கூறியுள்ளார். ”வங்கிகள், சில்லரை விற்பனை நிறுவனங்கள், டெலிகாம் நிறுவனங்கள் போன்றவை பல பத்தாண்டுகளாக செயல்பட்டு வரும் சிக்கலான ஐ.டி அமைப்புகளை பயன்படுத்தி வருகின்றன. அவற்றை சாட்பாட் அப்கிரேட்கள் மூலம் மாற்றியமைக்க முடியாது” என்றார்.
அவருடன் பல்வேறு முக்கிய டெக் நிறுவன தலைவர்களும் உடன்படுகின்றனர். சாப்ட்வேர்களை அகற்றுவது என்பது தர்கத்திற்கு மிக முரண்பாடான விஷயம் என என்விடியா சி.இ.ஒ ஜென்சென் ஹுவாங் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு மைக்ரோ அளவிலான ஹிஸ்டீரியா என ஆர்ம் நிறுவன சி.இ.ஓ ரெனெ ஹுவாங் கூறியுள்ளார்.
சாப்ட்வேர் துறை அழிந்து விடும் என்ற கதையாடல் பைத்தியக்காரத்தனமான ஒன்று என மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரியும், விண்டோஸ் 7 மற்றும் 8-ஐ நிர்மாணித்தவருமான ஸ்டீவன் சின்ஃபோஸ்கி கூறியுள்ளார்.
ஆந்த்ரோபிக் நிறுவனம், அதன் கிளாட் கோவொர்க் கருவிக்காக துறை சார்ந்த பிள்க் இன்களை ஜனவரி இறுதியில் அறிமுகம் செய்தது. இது சாப்ட்வேர் சேவை நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தின் காரணமாக, வெறும் ஆறு வர்த்தக அமர்வுகளில், அமெரிக்காவின் எஸ் & பி சாப்ஃப்வேர் மற்றும் சேவைகள் குறியீட்டில் 83,000 கோடி டாலர் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *