22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
உள்நாட்டு செய்திகள்

தங்கம் விலை உயர்வு : லாபம் யாருக்கு??

கடந்த ஒரு ஆண்டில் தங்க விலையில் ஏற்பட்ட 70 % உயர்வினால், பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட தங்கக் கடன் நிறுவனங்களான முத்தூட் ஃபைனான்ஸ் மற்றும் மணப்புரம் ஃபைனான்ஸ் ஆகியவற்றின் பங்குகள் கடந்த 12 மாதங்களில் முறையே கிட்டத்தட்ட 94% மற்றும் 68% உயர்ந்துள்ளன.

அடமானம் வைக்கப்படும் தங்கத்தின் மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு இதர வகை கடன்களை விட தங்கக் கடன்களை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறியுள்ளது. அதே நேரத்தில் பாதுகாப்பற்ற தனிநபர் கடன் மீதான ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள், கடன் வாங்குபவர்களை தங்க கடனுக்கு மாற தூண்டியுள்ளது.

2025-26 இன் முதல் பாதியில், முத்தூட் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள தங்கக் கடன் சொத்துக்களில் (AUM) ஆண்டுக்கு ஆண்டு (YoY) 47% வளர்ச்சியைப் பதிவு செய்தது. இது 2024-25- இல் 43% AUM வளர்ச்சிக்குப் பிறகு, நடப்பாண்டிற்கான எதிர்பார்ப்புகளை விஞ்சியுள்ளது. செப்டம்பர் 2025 வரை தங்க விலைகள் உயர்ந்துள்ள நிலையில் முத்தூட்டின் வட்டி வருமானம், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 55% அதிகரித்து, 2026இன் இரண்டாவது காலாண்டில் ₹6,304 கோடியாக உயர்ந்துள்ளது. அதே காலாண்டில் ₹300-400 கோடி அளவிலான வாராக்கடன்கள் வசூல் செய்யப்பட்டதால், மொத்த NPA விகிதத்தை தொடர்ச்சியாக 30 அடிப்படைப் புள்ளிகள் குறைக்க உதவியது. ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு காரணமாக நிதிச் செலவு குறைவாகவும், அதிக லாபம் தரும் கடன் விநியோகங்களின் விகிதம் அதிகமாகவும் இருப்பதால், லாப விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 87.5% அதிகரித்து ₹2,345 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த லாபங்களால் உற்சாகமடைந்த முத்தூட் நிர்வாகம், அதன் FY26 தங்கக் கடன் AUM வளர்ச்சிக்கான முன் கணிப்பை 15% இலிருந்து 30-35% ஆக உயர்த்தியுள்ளது. MCLR குறைப்புகளின் பலன்களை வங்கிகள் வழங்குவதால், நிதிச் செலவு வரும் காலாண்டுகளில் மேலும் 15-20 அடிப்படை புள்ளிகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேர்மறையான போக்குகள், முத்தூட் பங்கு விலை, கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர உதவியது திங்கள் அன்று இது ₹3,833 ஆக உயர்ந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *