Latest: செமாக்ளூடைடு மருந்தை அறிமுகப்படுத்தும் நாட்கோ ஃபார்மாIPO மூலம் ரூ.13,000 கோடி திரட்டும் SBI மியூச்சுவல் ஃபண்ட்மிகப்பெரிய சரிவைப் பதிவு செய்த சென்செக்ஸ்HDFC வங்கியின் CEO சஷிதர் ஜகதீஷனருக்கு பதவி நீட்டிப்பு ?BNCAP 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்ற டாடா மோட்டார்ஸின் சியராகாலாவதியாகும் நோவோ நோர்டிஸ்கின் செமாக்ளுடைடுக்கான இந்தியக் காப்புரிமைஇந்தியாவின் ஜி.டி.பி பற்றிய தரவுகளின் போதாமையும், விளைவுகளும்How India's GDP Data Misread the Economy and Complicated Policy making: A Deeper Lookஹார்முஸ் நீரிணையில் இந்தியாவிற்கான 17 லட்சம் டன் கச்சா எண்ணெய் தேக்கம்வட்டி விகிதத்தை மாற்றமில்லாமல் 3.5% - 3.75%இல் தக்க வைத்த அமெரிக்க ரிசர்வ் வங்கி

22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
உள்நாட்டு செய்திகள்

Heavy returns கொடுத்த தங்கமயில்…!!!

2025-26 செப்டம்பர் காலாண்டில் தங்கமயில் ஜூவல்லரி லிமிடெட் நிறுவனம் வலுவான வருவாய் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ₹17.4 கோடி இழப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது நிகர லாபம் ₹58.5 கோடியாக உயர்ந்துள்ளது.

செயல்பாடுகளிலிருந்து கிடைக்கும் வருவாய் கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் ₹1,181 கோடியாக இருந்து, தற்போது 45% அதிகரித்து ₹1,711 கோடியாக உயர்ந்துள்ளது.

நிறுவனத்தின் செயல்திறன் வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ₹7.5 கோடி EBITDA இழப்பை எதிர் கொண்ட நிலையில், தற்போது ₹106.2 கோடியாக EBITDA வருவாய் அதிகரித்துள்ளது. தற்போது EBITDA விகிதம் 6.2% ஆக உள்ளது. இது கடந்த ஆண்டின் மைனஸ் அளவில் இருந்து குறிப்பிடத்தக்க மீட்சியைக் குறிக்கிறது.

சமீபத்திய சுங்க வரி குறைப்பு காரணமாக, இந்நிறுவனம் 2025-26 செப்டம்பர் காலாண்டில் ₹15.5 கோடி அளவுக்கு கைவசம் உள்ள ஸ்டாக்களின் அளவு குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது. 2026 நிதியாண்டின் முதல் பாதியில், ஒன்பது புதிய விற்பனை நிலையங்களைத் திறந்தது, மொத்த விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை 66 ஆக உயர்த்தியுள்ளது.

நிதியாண்டின் முதல் பாதியில் கடை ஒன்றின் சராசரி விற்பனை வளர்ச்சி (SSSG) 10.3% ஆக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 15.19% ஆக இருந்தது. அடுத்த சில மாதங்களில் மேலும் மூன்று கடைகளை இந்நிறுவனம் திறக்க உள்ளது.

காலாண்டு வருவாய் பற்றிய அறிவிப்பைத் தொடர்ந்து, தங்கமயில் ஜூவல்லரி லிமிடெட்டின் பங்கு விலை நேற்று 18.35% அதிகரித்து ₹2,567.80ஆக உயர்ந்தது. கடந்த ஒரு மாதத்தில் இதன் பங்கு விலை 23% உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *