இந்துஜா குழுமம் வலியுறுத்தல்..!!
தனியார் வங்கிகளை தொடங்கி நடத்துபவர்கள், 40% வரை பங்குகளை வைத்திருக்க அனுமதிக்கவும், அதற்கேற்ப வாக்களிக்கும் உரிமையை சீரமைக்கவும் இந்துஜா குழுமம், மத்திய அரசையும், இந்திய ரிசர்வ் வங்கியையும் வலியுறுத்தியுள்ளது.
இண்டஸிண்ட் இண்டர்நேசனல் ஹோல்டிங்ஸ் (IIHL) இன் தலைவர் அசோக் இந்துஜா, IIHL இன் காப்பீடு, சொத்து மேலாண்மை மற்றும் பத்திர வணிகங்களை இண்டஸிண்ட் வங்கியில் இணைக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இண்டஸிண்ட் வங்கி இப்போது 17% க்கும் அதிகமான மூலதன விகிதத்தைக் கொண்டுள்ளது. எனவே அதில புதிய மூலதனத்தை செலுத்தும் திட்டம் எதுவும் இல்லை. அதற்கு தேவையும் இல்லை என்று கூறியுள்ளார். நிதி தேவைப்படும் போதெல்லாம் முதலீடு செய்வோம் என்று கூறியுள்ளார்.
ஒழுங்குமுறை ஆணையமும் அரசாங்கமும் சரியான திசையில் நகர்கின்றன என்று கருதுவதாக கூறியுள்ளார். ”அவர்கள் முன்னணி வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளே வர அனுமதிக்கிறார்கள். அரசாங்கத்திற்கும் ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் எனது பரிந்துரை என்னவென்றால், தனியார் துறை வங்கிகளில் மூலதனக் கட்டுப்பாடு இருக்கக்கூடாது. அது எப்போதும் வரவேற்கப்பட வேண்டும், ஏனெனில் அது நிறுவனத்தை பலப்படுத்துகிறது. வங்கி நிறுவனர்கள் வசம் உள்ள பங்குகளின் அளவுக்கு 15% உச்ச வரம்பு விதித்துள்ளனர். ஆனால் உலகில் வேறு எங்கும் வங்கி நிறுவனர்களின் பங்குகளுக்கு உச்ச வரம்பு விதிக்கபடவில்லை. 1994இல் வங்கி லைசென்ஸ்கள் வழங்கப்பட்டபோது, நாங்கள் 40% வைத்திருக்க அனுமதிக்கப்பட்டோம். ஆனால் அது காலப்போக்கில் குறைக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இண்டஸிண்ட் வங்கியில், IIHL தனது பங்குகளை 26% வரை உயர்த்துவதற்கு ரிசர்வ் வங்கி கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
”15% இல் பங்குகளை மட்டும் வைத்திருக்குமாறு எங்களிடம் கேட்கப்பட்டது. பின்னர் பங்குகளை 26% ஆக உயர்த்த ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்தோம். நிர்வாக குழு மூலம் விண்ணப்பிக்கும் செயல்முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் கொள்கையளவில் ஒப்புதல் பெற்றோம். இண்டஸ்இண்ட் வங்கி நிர்வாகக் குழு மூலம் படிவம் A ஐ சமர்ப்பித்தோம்; சில கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது. இப்போது, 15 முதல் 26% வரை இறுதி ஒப்புதலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அதைப் பெறுவீர்கள் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
வங்கிகளை தொடங்குபவர்களுக்கு, வாக்களிக்கும் உரிமைகள் அதிக சதவீதமாக மாற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்

Useful info. Good