22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
உள்நாட்டு செய்திகள்

அடுத்தடுத்து அசத்தும் இந்தியன் ஹோட்டல்ஸ்..!!

டாடா குழுமத்தின் ஒரு அங்கமான இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனம் (IHCL), பிரிஜ் ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட்டில் சுமார் 51% பங்குகளை, ரூ.225 கோடிக்கு மிகாமல் வாங்க, பங்குச் சந்தா மற்றும் பங்கு கொள்முதல் ஒப்பந்தங்களை செய்துள்ளதாக அறிவித்தது. சில ‘நிபந்தனை முன்னறிவிப்புகளை’ பூர்த்தி செய்தால், பரிவர்த்தனை நேரடியாகவோ அல்லது அதன் துணை நிறுவனங்களான ANK மற்றும் பிரைட் மூலமாகவோ நடக்கும் என்று IHCL தெரிவித்துள்ளது. இந்த கையகப்படுத்தல் மூலம், பிரிஜ் பிராண்டின் உரிமையைப் பெற்று, அதன் நிறுவனர்களுடன் இணைந்து, இந்தியாவில் பொட்டிக் பிரிவை மேம்படுத்த திட்டமிட்டுள்ளாதாக தெரிவித்துள்ளது.

பிரிஜ் என்ற பொட்டிக் பிராண்டின் சொந்த நிறுவனத்தில், 440 அறைகள் கொண்ட 22 ஹோட்டல்கள் (செயல்பாட்டில் 11 மற்றும் உருவாக்கத்தில் 11) உள்ளன. அதன் சொத்துக்களில் தர்மசாலா, வாரணாசி மற்றும் ஜெய்ப்பூர் போன்ற இடங்களில் உள்ள ஹோட்டல்களும் அடங்கும். வருவாய் பங்கு குத்தகைகள் மற்றும் மேலாண்மை ஒப்பந்தங்களை உள்ளடக்கிய பிரிஜ் ஹாஸ்பிடாலிட்டி, 2024-2025 நிதியாண்டில் ரூ.62.31 கோடி வருவாய் ஈட்டியது. இந்தப் பரிவர்த்தனை மார்ச் 31, 2026 அன்று அல்லது அதற்கு முன்னர் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IHCL, அதன் முதலீட்டாளர் விளக்க அறிக்கையில், முன்மொழியப்பட்ட பரிவர்த்தனையில் ரூ.105-140 கோடி முதன்மை முதலீடும், ரூ.85 கோடி இரண்டாம் நிலை பங்கு வாங்கலும் அடங்கும் என்று கூறியது. இந்த பரிவர்த்தனை அதன் தற்போதைய ட்ரீ ஆஃப் லைஃப் பிராண்டை நிறைவு செய்ய பொட்டிக் பிரிவில் ஒரு பிராண்டைச் சேர்க்கிறது என்றும், தொடர்ச்சியான வணிக உந்துதல் மற்றும் எதிர்கால வளர்ச்சியை செயல்படுத்த தற்போதைய நிர்வாகக் குழுவின் தொடர்ச்சியை இது உறுதி செய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

IHCL நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி புனீத் சத்வால் கூறுகையில், “இந்த முன்மொழியப்பட்ட பரிவர்த்தனையானது IHCL-இன் ஹோட்டல் எண்ணிக்கையை 610 ஆக உயர்த்துகிறது. மேலும், 253 ஹோட்டல்கள் கட்டுமானப் பணியில் உள்ளன. இதன் மூலம், ‘ஆக்சிலரேட் 2030’ திட்டத்தின் கீழ் 700 ஹோட்டல்கள் என்ற எங்கள் இலக்கை அடைவதற்கான பாதையில் நாங்கள் சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறோம்,” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *