Latest:
சாதனை அளவை எட்டிய ஜூலை மாத வாகனங்கள் விற்பனைநகை வணிகத்தை விரிவுபடுதும் கல்யாண் ஜூவல்லர்ஸ்பிரிட்டானியாவின் காலாண்டு லாபம் ₹591 கோடியாக 14% உயர்வுLIC-யின் காலாண்டு லாபம் ₹13,492 கோடியாக 23% அதிகரிப்புஅமெரிக்காவில் வேலையின்மை உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்புபுதிய வாகனத் திட்டத்தை டாடா டெக்னாலஜிஸிடம் ஒப்படைக்கும் ஹோண்டா மோட்டார்ஸெப்டோ ஐபிஓ இடைநிறுத்தமும், சந்தையில் மேற்கொள்ளப்படும்  மறுசீரமைப்பும்Zepto’s IPO pause is not a retreat — it is a hard-edged recalibration in a market that has stopped paying for pure growth stories.வட்டி விகித உயர்வுக்கான வாய்ப்பு குறைவினால் தங்கம் விலை உயர்வுLICயின் OFS பங்கு விற்பனையை புறக்கணித்த சில்லறை முதலீட்டாளர்கள்சாதனை அளவை எட்டிய ஜூலை மாத வாகனங்கள் விற்பனைநகை வணிகத்தை விரிவுபடுதும் கல்யாண் ஜூவல்லர்ஸ்பிரிட்டானியாவின் காலாண்டு லாபம் ₹591 கோடியாக 14% உயர்வுLIC-யின் காலாண்டு லாபம் ₹13,492 கோடியாக 23% அதிகரிப்புஅமெரிக்காவில் வேலையின்மை உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்புபுதிய வாகனத் திட்டத்தை டாடா டெக்னாலஜிஸிடம் ஒப்படைக்கும் ஹோண்டா மோட்டார்ஸெப்டோ ஐபிஓ இடைநிறுத்தமும், சந்தையில் மேற்கொள்ளப்படும்  மறுசீரமைப்பும்Zepto’s IPO pause is not a retreat — it is a hard-edged recalibration in a market that has stopped paying for pure growth stories.வட்டி விகித உயர்வுக்கான வாய்ப்பு குறைவினால் தங்கம் விலை உயர்வுLICயின் OFS பங்கு விற்பனையை புறக்கணித்த சில்லறை முதலீட்டாளர்கள்

உள்நாட்டு செய்திகள்

நுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் ITC

பேக் செய்யப்பட்ட உணவுப் பிரிவில், சுவையுடன் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தையும் இணைக்கும் தயாரிப்புகளை நுகர்வோர் அதிகம் விரும்புவதால், அவர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ITC தீவிர கவனம் செலுத்தி வருகிறது. நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் கூட, உயர் தர மற்றும் மிக உயர் தர தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்து வருவதை இந்நிறுவனம் பெரிதும் நம்பியுள்ளது.

FICCI நிகழ்ச்சி ஒன்றின் இடையே பேசிய ITC-யின் உணவுப் பிரிவு நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹேமந்த் மாலிக் “நுகர்வோர் ஆரோக்கியம் மற்றும் சுவையை எதிர்பார்க்கிறார்கள்; இந்த மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான பரந்த தயாரிப்பு வரிசையை நாங்கள் கொண்டுள்ளோம். பல்வேறு பிராண்டுகளின் கீழ் ஊட்டச்சத்து மிகுந்த தயாரிப்புகளை நாங்கள் வழங்குகிறோம். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பிரிவில் புரதம் குறித்த விவாதங்கள் அதிகம் இருப்பதால், ‘ஆஷிர்வாத்’ பிராண்டின் கீழ் அதிக புரதம் கொண்ட கோதுமை மாவை அறிமுகப்படுத்தினோம். மிக விரைவில் புரதச் சத்து பானங்கள் உள்ளிட்ட பிற தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்தவுள்ளோம். மேலும், ‘பி நேச்சுரல்’ பிராண்டின் கீழ் ‘கோகோனட் கோலா’ பானத்தையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம்” என்றார். ‘ரைட் ஷிஃப்ட்’ பிராண்டின் கீழ் உள்ள தயாரிப்புகள், 40 வயதுக்கு மேற்பட்ட நுகர்வோரின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நகர்ப்புறச் சந்தைகளில் மட்டுமல்லாமல் கிராமப்புறச் சந்தைகளிலும் உயர்தர மற்றும் மிக உயர்தர தயாரிப்புகளை நோக்கிய நுகர்வுப் போக்கு அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். “நாங்கள் கடைகளில் மேற்கொள்ளும் ஆய்வுகளில், கிராமப்புறங்களில் கிடைக்கும் தயாரிப்புகளும் நகர்ப்புறங்களில் கிடைப்பதைப் போலவே இருப்பதை அறிய முடிகிறது. நுகர்வோர் உயர்தர தயாரிப்புகளை நாடுகிறார்கள்; இது நகர்ப்புற இந்தியாவில் மட்டுமல்ல, கிராமப்புற இந்தியாவிலும் உயர்தர மற்றும் மிக உயர்தர தயாரிப்புகளுக்கான தேவை வளர்ந்து வருகிறது. நுகர்வோர் இனி விலையை மட்டும் பார்த்து வாங்குவதில்லை. அவர்கள் தரத்தைப் புரிந்துகொள்கிறார்கள், வாங்குவதற்கான காரணத்தைப் புரிந்துகொள்கிறார்கள்; இது உற்பத்தியாளர்களும் பிராண்ட் நிறுவனங்களும் நுகர்வோரைப் பற்றி ஆழமாகச் சிந்தித்துப் புரிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பாகும்,” என்று FICCI-யின் உணவு பதப்படுத்துதல் குழுவின் தலைவரான மாலிக் கூறினார்.

சமையல் எண்ணெய் போன்ற மூலப்பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *