22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
உள்நாட்டு செய்திகள்

மருந்துத் துறையில் முக்கியமான அறிவிப்பு..!!

அஸ்ட்ரா ஜெனெகா பார்மா இந்தியா மற்றும் சன் பார்மா சூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை இந்தியாவில் சோடியம் சிர்கோனியம் சைக்ளோசிலிகேட் (SZC)-க்கான ”இரண்டாவது பிராண்ட் கூட்டு முயற்சியை” அறிவித்துள்ளன. இந்த மருந்து, நிரந்தர சிறுநீரக நோய் (CKD) மற்றும் இதய செயலிழப்பு நோயாளிகளைப் பாதிக்கும் ஹைபர்கலேமியாவுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

இரு நிறுவனங்களும் இந்தியாவில் SZC – ஐ வெவ்வேறு பிராண்ட் பெயர்களில் விளம்பரப்படுத்தி, சந்தைப்படுத்தி, விநியோகிக்கும். அஸ்ட்ராஜெனெகா அதன் பிராண்டான லோகெல்மாவின் மூலமும், சன் பார்மா ஜிம்லியாண்ட் என்ற பிராண்ட் பெயரிலும் இதை விற்பனை செய்ய உள்ளன. இதற்கான விலை விவரங்களை இந்நிறுவனங்கள் வெளியிடவில்லை.

அஸ்ட்ராஜெனெகா SZC-க்கான அறிவுசார் சொத்துரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ளும் என்றும், சந்தைப்படுத்தல் அங்கீகாரத்தையும், மூலக்கூறுக்கான இறக்குமதி உரிமத்தையும் வைத்திருக்கும் என்றும் கூறியது.

அஸ்ட்ராஜெனெகா பார்மா இந்தியாவின் நாட்டுத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான பிரவீன் ராவ் அக்கினேபள்ளி, சன் பார்மாவுடனான கூட்டணி, அதன் முக்கிய மருந்துகளுக்கான சந்தையை விரிவுபடுத்த உதவும் என்று கூறினார். சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநர் கீர்த்தி கணோர்கர், நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் புதுமையான சிகிச்சைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகக் கூறினார்.

ஹைப்பர்கலீமியா என்பது மருத்துவ ரீதியாக குறிப்பிடத்தக்க ஒரு நிலையாகும், இது நிரந்தர சிறுநீரக நோய் (CKD) மற்றும் இதய செயலிழப்பு (HF) உள்ளவர்களையும், ரெனின்-ஆஞ்சியோடென்சின்-ஆல்டோஸ்டிரோன் சிஸ்டம் (RAAS) இன்ஹிபிட்டர் சிகிச்சையைப் பெறும் இதய நோயாளிகளை அதிக அளவில் பாதிக்கிறது. CKD நோயாளிகளில் 50 சதவீதம் பேருக்கும் மற்றும் நிரந்தர HF உள்ள நோயாளிகளில் 42 சதவீதம் பேர் வரை ஹைப்பர்கலீமியா ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனமான சன் பார்மா, நீண்ட கால நோய் சிகிச்சைகள் மற்றும் கடுமையான நோய்களுக்கான பிரிவில் 15,000 பேர் கொண்ட ஊழியர்கள் குழுவை கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *