மீண்டும் கை விரித்த செபி..!!
டிஜிட்டல் தங்க நிறுவனங்களை ஒழங்குபடுத்த, எந்தவொரு புதிய விதிமுறைகளையும், இந்திய பங்கு சந்தைகள் ஒழுங்குமுறை ஆணையமான (செபி) பரிசீலிக்கவில்லை என்று அதன் தலைவர் துஹின் காந்தா பாண்டே தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தியாவில், ஒழுங்குபடுத்தப்பட்ட தங்கம் தொடர்பான முதலீடுகளை, பரஸ்பர நிதிகள் வழங்கும் பரிமாற்ற-வர்த்தக நிதிகள் (ETFகள்) மூலமாகவோ அல்லது இதர வகை தங்கப் பத்திரங்கள் மூலமாகவோ மட்டுமே செய்ய முடியும் என்று கூறினார்.
இந்த தங்க ETF-கள் மற்றும் இதர வகை தங்கப் பத்திரங்கள் மட்டுமே செபியின் ஒழுங்குமுறை வரம்பிற்குள் வருவதால், இவற்றில் செபி தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
”தங்க முதலீட்டை பரஸ்பர நிதிகள் வழங்கும் தங்க முதலீட்டு நிதிகள் மூலமாகவோ அல்லது வர்த்தகம் செய்யக்கூடிய தங்கப் பத்திரங்கள் மூலமாகவோ செய்யலாம். இவை ஒழுங்குபடுத்தப்படும் முதலீட்டு கருவிகள். எனவே இப்போதைக்கு, இவற்றில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துகிறோம், ”என்று துஹின் காந்தா பாண்டே கூறினார்.
நவம்பர் 8, 2025 அன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், முதலீட்டாளர் பாதுகாப்பு வழிமுறைகள், டிஜிட்டல் தங்கம் அல்லது மின்-தங்கப் பொருட்களுக்குப் பொருந்தாது என்று செபி கூறியிருந்தது. ஏனெனில் அவை பங்குகளாகவோ அல்லது டிரைவேட்டிவ்ஸ்களாகவோ அடையாளம் காணப்படவில்லை.
”பத்திரச் சந்தை வரம்பிற்குட்பட்ட முதலீட்டாளர் பாதுகாப்பு வழிமுறைகள் எதுவும் அத்தகைய டிஜிட்டல் தங்கம் / மின்-தங்கப் பொருட்களில் முதலீடு செய்யக் கிடைக்காது என்பதை முதலீட்டாளர்கள்/பங்கேற்பாளர்கள் அறிந்திருக்கிறார்கள்,” என்று செபி தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் தங்கம் மற்றும் இதர மின்-தங்கப் பொருட்கள் போன்ற டிஜிட்டல் சொத்து வகைகளை முதலீட்டாளர்களுக்கு வழங்கும் பல ஆன்லைன் தளங்களை செபி கவனித்துள்ளதாகவும் குறிப்பிட்டது.
பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த டிஜிட்டல் சொத்து முதலீடுகள், பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் பாதுகாக்கப் படாவிட்டாலும், அவை சாதாரண தங்கத்திற்கான மாற்று முதலீட்டு கருவிகளாக சந்தைப்படுத்தப் படுகின்றன என்றும் செபி குறிப்பிட்டது
