22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
உள்நாட்டு செய்திகள்

டாடா மோட்டார்ஸ் PV : லாபம் .. காரணம் என்ன??.

2025-26 செப்டம்பர் காலாண்டில், மின்சார வாகனங்கள் (EV) மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) வணிகங்களை தற்போது வைத்திருக்கும் டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெகிக்கில்ஸ் நிறுவனத்தின் (TMPV) ஒருங்கிணைந்த நிகர லாபம் ₹76,248 கோடியாக 25 மடங்கு உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது.
டாடா மோட்டர்ஸின் வணிக வாகன பிரிவும், பயணிகள் வாகன பிரிவுகளும் தனியாக பிரிக்கப்பட்டதன் தொடர்புடைய ₹82,616 கோடி அளவிலான ஒரு முறை லாபம் இந்த உயர்வுக்கு காரணமாகும்.

இருப்பினும், இந்த லாபத்தைத் தவிர்த்து, JLR அளவுகளில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியால் ஒட்டுமொத்த செயல்திறன் குறைந்ததால், இந்நிறுவனம் ₹6,368 கோடி இழப்பை சந்தித்தது. கடந்த ஆண்டு காலாண்டில் இந்நிறுவனம் ₹3,056 கோடி நிகர லாபத்தை ஈட்டியிருந்தது.

ஒருங்கிணைந்த வருவாய் ₹71,714 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈடப்பட்ட ₹82,841 கோடியிலிருந்து 13.4% குறைந்துள்ளது. வருவாய் அளவு முந்தைய காலாண்டில் பதிவு செய்யப்பட்ட ₹87,141 கோடியிலிருந்து 18% குறைந்துள்ளது.

டாடா மோட்டார்ஸின் ஒட்டுமொத்த வணிகத்தில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்ட JLR இன் வருவாய் 24.3% குறைந்துள்ளது. அதே நேரத்தில் உள்நாட்டு பயணிகள் வாகனப் பிரிவின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 15.6% அதிகரித்து ₹13,500 கோடியாக உள்ளது.

செயல்பாட்டு மட்டத்தில், நிறுவனம் ₹1404 கோடி EBITDA இழப்பை பதிவு செய்துள்ளது. இது செப்டம்பர் 2024 காலாண்டில் பதிவு செய்யப்பட்ட ₹9,914 கோடியிலிருந்து பெரிய அளவிலான சரிவாகும்.

ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு மற்றும் பண்டிகை கால தேவைகளினால், இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் உள்நாட்டு வணிகம் 11% ஆண்டு வளர்ச்சியை பெற்றது. இந்த காலாண்டில் 1.44 லட்சம் யூனிட்களை (EV-கள் உட்பட) விற்றது, இந்தப் பிரிவின் வருவாய் ஆண்டுக்கு 15.6% அதிகரித்து ₹13,000 கோடியாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் EBITDA லாப விகிதம், ஆண்டுக்கு 40 அடிப்படை புள்ளிகள் குறைந்து 5.8% ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *