22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
உள்நாட்டு செய்திகள்

வின்ஃபாஸ்ட் Vs Tesla : ஜெயிச்சது யாரு??

இந்தியாவின் மின்சார வாகன (EV) சந்தையில் புதிதாக நுழைந்துள்ள இரண்டு சர்வதேச நிறுவனங்களான டெஸ்லா மற்றும் வின்ஃபாஸ்ட் இடையே பண்டிகைக் கால விற்பனையில் கடுமையான போட்டி உருவானது. செப்டம்பர்-அக்டோபர் காலகட்டத்தில் 109 கார்களை விற்பனை செய்த டெஸ்லாவுடன் ஒப்பிடும்போது, 137 கார்களை விற்பனை செய்து வின்ஃபாஸ்ட் சற்று முன்னிலை வகித்தது.

டெக்சாஸை தலைமையிடமாகக் கொண்ட டெஸ்லா, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், முறையே 69 மற்றும் 40 கார்களை விற்பனை செய்ததாக ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன்ஸ் கூட்டமைப்பின் (FADA) தரவுகள் காட்டுகின்றன.

தனது இந்திய நெட்வொர்க்கை வேகமாக விரிவுபடுத்தி வரும் வியட்நாமிய ஆட்டோ நிறுவனமான வின்ஃபாஸ்ட் இந்த இரண்டு மாதங்களில் முறையே 6 மற்றும் 131 கார்களை விற்பனை செய்தது.

வின்ஃபாஸ்ட் ஆசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஃபாம் சான் சாவ், அடுத்த 5-10 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு முக்கிய மின்சார வாகன உற்பத்தியாளராக மாற இலக்கு வைத்துள்ளதாகவும், இங்கு அதிக அளவில் முதலீடு செய்ய தயாராக இருப்பதாகவும் செப்டம்பரில் கூறியிருந்தார். டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் அதன் விற்பனையை மெதுவாக அதிகரித்து வரும் நிலையில், வின்ஃபாஸ், இந்தியாவில் அதன் விற்பனையகங்களை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் இது குருகிராமில் தனது 24வது டீலர்ஷிப்பைத் திறந்தது. இந்த ஆண்டின் இறுதிக்குள், நாடு முழுவதும் 35 டீலர்ஷிப்களை அமைக்க இலக்கு வைத்துள்ளது.

அதே சமயம் டெஸ்லா மும்பை மற்றும் டெல்லியில் ஷோரூம்களை திறந்துள்ளது. இதுவரை 600 முன்பதிவுகளைப் பெற்றுள்ளது.

வின்ஃபாஸ்ட் அதன் சிறிய எஸ்யூவி விஎஃப்6 (தொடக்க விலை ₹16.4 லட்சம்) மற்றும் நடுத்தர அளவிலான எஸ்யூவி விஎஃப்7 (தொடக்க விலை ₹20 லட்சம்) ஆகியவற்றை விற்பனை செய்கிறது. இது இந்தியாவில் டெஸ்லா மாடல் ஒய் விலையில் ( ₹60.99 லட்சம்) மூன்றில் ஒரு பங்காகும். மாடல் ஒய் அமெரிக்காவில் ₹35.3 லட்சத்திற்கும், சீனாவில் சுமார் ₹32 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. உள்ளூர் அசெம்பிளியுடன் தொடரும் வின்ஃபாஸ்டைப் போலல்லாமல், டெஸ்லா முழுமையாக கட்டமைக்கப்பட்ட யூனிட்களை இறக்குமதி செய்வதால், இந்தியாவின் விலை அதிகமாக உள்ளது.

வின்ஃபாஸ்ட் சமீபத்தில் தூத்துக்குடியில் தனது ஆலையைத் திறந்துள்ளது. இதில் வருடத்திற்கு 50,000 யூனிட்களை அசெம்பிள் செய்ய முடியும், இது வரும் ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரிக்கப்படலாம்.

சீனாவின் BYD, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *