Latest:
தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைஜூலையில் NBFC-களின் கடன் வளர்ச்சி 14.9% ஆக அதிகரிப்புவளர்ச்சியை அதிகரிக்க புதிய திட்டத்தை முன்னெடுக்கும் காரட்லேன்அமுல்: இந்தியாவின் வெண்மைப் புரட்சியைத் தூண்டிய கூட்டுறவு நிறுவனம்Amul: The Cooperative That Sparked India’s White Revolutionடெரிவேட்டிவ்ஸ் செட்டில்மென்ட் விலை முறையை மறுஆய்வு செய்யும் செபி5 நிமிடங்களில் ₹1 லட்சத்தை ₹44 லட்சமாக மாற்றிய கதையாடலின் பின்னணிThe Viral Claim of Turning ₹1 Lakh into ₹44 Lakh in 5 Minutes: Anatomy of Sensex’s Closing Auction Volatilityதங்கம் தொடர்பாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது ஒரு எச்சரிக்கை மணிதேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைஜூலையில் NBFC-களின் கடன் வளர்ச்சி 14.9% ஆக அதிகரிப்புவளர்ச்சியை அதிகரிக்க புதிய திட்டத்தை முன்னெடுக்கும் காரட்லேன்அமுல்: இந்தியாவின் வெண்மைப் புரட்சியைத் தூண்டிய கூட்டுறவு நிறுவனம்Amul: The Cooperative That Sparked India’s White Revolutionடெரிவேட்டிவ்ஸ் செட்டில்மென்ட் விலை முறையை மறுஆய்வு செய்யும் செபி5 நிமிடங்களில் ₹1 லட்சத்தை ₹44 லட்சமாக மாற்றிய கதையாடலின் பின்னணிThe Viral Claim of Turning ₹1 Lakh into ₹44 Lakh in 5 Minutes: Anatomy of Sensex’s Closing Auction Volatilityதங்கம் தொடர்பாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது ஒரு எச்சரிக்கை மணி

உள்நாட்டு செய்திகள்

ஹைதராபாத் வாடிக்கையாளர் சேவை மையத்தை மூடும் ஸொமாடோ

உணவு விநியோக தளமான ஸொமாடோ, அதன் ஹைதராபாத் மையத்தை மூடுவதன் மூலம் சுமார் 250 முதல் 300 வரையிலான வாடிக்கையாளர் சேவைப் பணியிடங்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக இச்செய்தி அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் பாதிக்கப்படவுள்ள ஊழியர்கள் மூன்றாம் தரப்பு சேவை நிறுவனங்கள் மூலம் பணிபுரிபவர்கள் ஆவர்; இவர்கள் ஸொமாடோவின் நேரடிப் பணியாளர் பட்டியலில் (payroll) இடம்பெறாதவர்கள்.

இந்நிறுவனம் அதன் சொந்தத் தளமான ‘Nugget’ மூலம் வாடிக்கையாளர் சேவைக்கு செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தை (automation) அதிகளவில் பயன்படுத்தி வருவதன் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

நிறுவனத்தின் தரவுகளின்படி, Nugget இதுவரை 220 கோடிக்கும் அதிகமான உரையாடல்களைக் கையாண்டுள்ளது. பல்வேறு குழுக்களிடையே 85 சதவீத தானியங்கிச் செயல்பாட்டை உறுதி செய்வதோடு, 99.9 சதவீத சேவை இயக்க நேரத்தையும் (uptime SLA) இது பராமரித்து வருகிறது.

மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஸொமாடோ அதன் உள்நாட்டு வாடிக்கையாளர் சேவைப் பணிகளை குருகிராமில் (Gurugram) ஒருங்கிணைத்து வருகிறது.

விவரம் அறிந்தவர்களின் கூற்றுப்படி, மாதம் 1.5 கோடிக்கும் அதிகமான உரையாடல்களைக் கையாளும் அதே வேளையில், வாடிக்கையாளர் சேவைக்கான செலவுகளை 55 சதவீதம் குறைக்கவும் Nugget உதவியுள்ளது; இதன் மூலம் ஆண்டுச் செலவுகள் சுமார் 2 கோடி டாலரிலிருந்து 90 லட்சம் டாலராகக் குறைந்துள்ளன.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஸொமாடோ அசோசியேட் ஆக்சிலேரட்டர் திட்டத்தின் கீழ், ஸொமாடோ நிறுவனம் சுமார் 600 வாடிக்கையாளர் சேவைப் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்தது. குருகிராம் மற்றும் ஹைதராபாத் அலுவலகங்களைச் சேர்ந்த ஊழியர்களைப் பாதித்த இந்த நடவடிக்கை, நிறுவனம் Nugget-ஐ அறிமுகப்படுத்திய ஒரு மாதத்திற்குள்ளேயே மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *