அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் முடிவு..!!
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதீத இறக்குமதி வரி விதித்துள்ள டிரம்ப், காபி, கோகோ, வாழைப் பழங்கள் மற்றும் சில மாட்டிறைச்சி பொருட்கள் போன்ற முக்கிய விவசாய பொருட்கள் இறக்குமதிகளுக்கு இதில் இருந்து விலக்கு அளித்துள்ளார். இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அமெரிக்காவில் உணவு பொருட்கள் விலை அதிகரிப்பினால், டிரம்ப் அரசியல் ரீதியான பின்னடைவை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் டிரம்ப் விதித்துள்ள இறக்குமதி வரிகள் காரணமாக மாட்டிறைச்சி, காபி, சாக்லேட் மற்றும் இதர சில உணவுப் பொருட்களின் விலைகளை வணிகர்கள் உயர்த்தியுள்ளனர். பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், உணவு பொருட்கள் விலை உயர்வு மேலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் தக்காளி, வெண்ணெய், தேங்காய், ஆரஞ்சு மற்றும் அன்னாசி உள்ளிட்ட பல பழங்களுக்கும் இறக்குமதி வரி விலக்கு அளித்துள்ளார். காபியுடன், கருப்பு மற்றும் பச்சை தேயிலை மற்றும் இலவங்கப்பட்டை மற்றும் ஜாதிக்காய் போன்ற மசாலாப் பொருட்களுக்கும் வரி குறைப்புக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க இறக்குமதி வரிகள் அவசியம் என்று வலியுறுத்தி வந்த டிரம்பிற்கு, இந்த நடவடிக்கை ஒரு தலைகீழ் மாற்றத்தைக் குறிக்கிறது. அதிக இறக்குமதி வரிகளின் சுமையை இறுதியில் அமெரிக்க நுகர்வோர்கள் மீது சுமத்தக் கூடாது என்று அவர் வாதிட்டுள்ளார்.
நான்கு லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் வர்த்தக கட்டமைப்பு ஒப்பந்தங்களை டிரம்ப் செய்துள்ள பின், ஒரு நாளுக்குப் பிறகு இந்த வரி விலக்குகளை அறிவித்துள்ளார். அர்ஜென்டினா, குவாத்தமாலா மற்றும் எல் சால்வடார் ஆகிய நாடுகளின் பெரும்பாலான பொருட்களுக்கு 10% வரிகளும், ஈக்வடாரில் இருந்து 15% வரிகளும் இதில் அடங்கும். வாழைப்பழங்கள் மற்றும் காபி போன்ற அமெரிக்காவில் போதுமான அளவுகளில் உற்பத்தி செய்யப்படாத பொருட்களின் மீதான வரிகளையும் இது நீக்குகிறது.
அமெரிக்காவில் உணவுப் பொருட்களின் விலைகள் செப்டம்பரில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் சுமார் 2.7% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
