22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
சர்வதேச செய்திகள்

20 % விலை குறைப்பு..!!

எடை குறைப்பு மருந்துகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க நோயாளிகளுக்கு அதன் பிரபலமான உடல் பருமன் மருந்தான Zepbound-ன் விலையை குறைப்பதாக எலி லில்லி நிறுவனம் அறிவித்துள்ளது. டிரம்ப் அரசின் இலக்குகளுக்கு ஏற்ப, இந்த மருந்தை பயனர்கள் அனைவரும் வாங்க வகை செய்ய இந்த விலை குறைப்பை முன்னெடுத்துள்ளது.

எலி லில்லியின் நேரடி-நுகர்வோர் தளமான LillyDirect-ல், எடை இழப்பு மருந்தான Zepbound-ன் ஒற்றை டோஸ் குப்பிகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் அதன் போட்டியாளரான Novo Nordisk-உடன் போட்டியிடுவதும் இதற்கு ஒரு காரணமாகும். Zepbound விலை 20% வரை குறைக்கப்பட்டுள்ளதை எலி லில்லி உறுதிப்படுத்தியுள்ளது.

ரொக்கமாக செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த அளவிலான குப்பியின் விலை மாதத்திற்கு $299 ஆக, சுமார் $50 அளவுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்த அதிக டோஸான 5 மில்லிகிராம் அளவிற்கு, ஒரு மாதத்திற்கு $399 செலவாகும். இது முந்தைய விலையை விட தோராயமாக 20% குறைவாகும். எலி லில்லியின் ‘Zepbound Self Pay Journey’ திட்டத்தின் கீழ் அதிக அளவு மருந்துகள் இப்போது மாதத்திற்கு $449க்குக் கிடைக்கும். இது முன்பு $499 ஆக இருந்தது.

நோயாளிகள் பொதுவாக குறைந்த அளவுகளில் தொடங்கி, பின்னர் அதிக எடை இழப்புக்காக, அதிக வலிமை உள்ள மருந்துகளுக்கு மாறுவது வழக்கம். LillyDirect- இல் Zepbound இன் விலைகளை இந்நிறுவனம் குறைத்திருப்பது இது இரண்டாவது முறையாகும்.

Zepbound மருந்து விலை குறைப்புகள், அமெரிக்காவில் உடல் பருமன் பிரச்சனையைக் குறைப்பதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக எலி லில்லி USA தலைவர் இலயா யூஃபா கூறியுள்ளார்.

Zepbound மாதத்திற்கு சுமார் $1,086 பட்டியல் விலையைக் கொண்டுள்ளது. இந்த விலை அளவு, ஒழுங்கற்ற காப்பீட்டுக் கவரேஜுடன் சேர்ந்து, உடல் பருமனால் பாதிக்கப்பட்ட பல அமெரிக்கர்களினால் வாங்க முடியாத மருந்தாக உள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், எலி லில்லி மற்றும் நோவோ நோர்டிஸ்க் நிறுவனங்களுடன், GLP-1 மருந்துகளை மிகவும் மலிவு விலையில் வழங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட சில வாரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *