22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
சர்வதேச செய்திகள்

ஏர் இந்தியாவால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு நஷ்டம்???

ஏர் இந்தியா நிறுவனத்தின் நஷ்டத்தினால் அதன் பங்குதாரரான சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் லாபம் குறைத்துள்ளது.

ஏர் இந்தியாவில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 25.1% பங்குகளையும், மீதமுள்ள 74.9% பங்குகளை டாடா சன்ஸும் வைத்திருக்கின்றன. இந்நிலையில் ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் நிகர லாபத்தில் ஆண்டுக்கு ஆண்டு 67.8% சரிவு ஏற்பட்டு, 23.9 கோடி சிங்கப்பூர் டாலராக சரிந்துள்ளது. ஏர் இந்தியாவின் இழப்புகள்தான் இதற்குக் காரணம் என்று அது கூறியுள்ளது.

”தொடர்புடைய நிறுவனங்களின் லாபத்தில் சிங்கப்பூர் எர்லைன்ஸின் பங்கு 41.7 கோடி சிங்கப்பூர் டாலராக, கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. குறிப்பாக முந்தைய ஆண்டு நிகர லாபத்தில் சேர்க்கப்படாத ஏர் இந்தியாவின் இழப்புகளைப் பிரதிபலிக்கிறது,” என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

குறைந்த ரொக்க இருப்பு மற்றும் வட்டி விகிதக் குறைப்புகளால் குறைந்த வட்டி வருமானமும் லாபத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 82.1% குறைந்து 5.2 கோடி சிங்கப்பூர் டாலராக இருந்தது. தொடர்புடைய நிறுவனங்களின் முழு இழப்பும் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

விஸ்தாராவுடன் இணைக்கப்பட்ட ஏர் இந்தியாவில் மூலதன அதிகரிப்பு திட்டத்தில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ₹6,300 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது.

மார்ச் 31, 2025 அன்று முடிவடைந்த நிதியாண்டில், ஏர் இந்தியாவின் வருவாய் 15% அதிகரித்து ₹78,636 கோடியாக இருந்தது. ஆனால் அதன் நிகர இழப்பு ₹10,859 கோடியாக அதிகரித்தது. ஒருங்கிணைந்த நிறுவனத்தில் ஏர் இந்தியா, விஸ்டாரா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் AIX கனெக்ட் ஆகியவை அடங்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *