22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
சர்வதேச செய்திகள்

9,000 பேரை பணிநீக்கம் செய்யும் பிரபல நிறுவனம்..

டென்மார்க்கை தளமாகக் கொண்ட பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனமான நோவோ நோர்டிஸ்க், 9,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் வேலை குறைப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள அதன் ஊழியர்களுக்கு இது குறித்த அறிவிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மைக் டவுஸ்ட்டார் தெரிவித்துள்ளார். ”உள்ளூர் சட்டங்களின் தாக்கம் காரணமாக இந்த அறிவிப்புகளின் விநியோக விகிதம் மாறுபடலாம். ஆனால் எமது நிறுவனம் வெளிப்படைத்தன்மை மற்றும் மரியாதையுடன் செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் மைக் டவுஸ்ட்டார் கூறினார்.

கடந்த மாதம் ஒரு நிறுவன அளவிலான மறுசீரமைப்பைத் தொடங்கியதால், இந்நிறுவனம் 9,000 வேலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளது என்றும் டவுஸ்ட்டார் கூறினார். எடை குறைப்பு மருந்துகளுக்கான சந்தையில் அமெரிக்க சந்தையில் இந்நிறுவனம் கடுமையான போட்டியை எதிர் கொண்டுள்ளது. எடை குறைப்பு மருந்து சந்தையில் அதன் போட்டி நிறுவனமான எலி லில்லியுடன் கடும் போட்டியில் ஈடுப்பட்டுள்ளதால், நிர்வாக செலவுகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.

மனிதவளத் துறை, மருத்துவ மேம்பாடு பிரிவு, அரிய நோய்கள் பிரிவு, மருத்துவம் மற்றும் ஒழுங்குமுறை பிரிவு, சட்டம் மற்றும் நெறிமுறைகள் பிரிவு , சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவு, நிதி, பொது விவகாரங்கள் போன்ற பிரிவுகள் இந்த ஆட்குறைபினால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனம் அக்டோபர் 14, 2025 முதல் ஆட்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நோவோ நோர்டிஸ்கின் பங்கு விலை வெள்ளி அன்று டென்மார்க் பங்குச் சந்தையில் 2.09% குறைந்து 315.95 ஸ்வீடிஷ் சந்தையில் முடிவடைந்தன. வியாழன் அன்று சந்தை முடிவில் இது 322.70 ஸ்வீடிஷ் குரோனாவாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *