NVIDIAவின் அடுத்த உருட்டு..!!
சிப் தயாரிக்கும் நிறுவனமான என்விடியா கார்ப், சிப்-டிசைன் மென்பொருள் நிறுவனமான சினோப்சிஸ் நிறுவனத்தின் பங்குகளில் 200 கோடி டாலர்களை முதலீடு செய்துள்ளது. இது அதன் சப்ளையர்களில் ஒன்றில் மேற்கொண்ட கணிசமான முதலீட்டைக் குறிக்கிறது. அதன் பங்குகளை ஒவ்வொன்றும் $414.79-க்கு வாங்கியதாக என் விடியா தெரிவித்துள்ளது.
என்விடியாவின் AI மற்றும் அதிவேக கணினி செயல் திறன்களை, சினோப்சிஸின் பொறியியல் தொழில்நுட்பங்களுடன் இணைத்து, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) குழுக்கள், புதிய தயாரிப்புகளை விரைவாகவும், செலவு குறைந்ததாகவும் வடிவமைக்க உதவும் என்று கூறியுள்ளது.
சினோப்சிஸின் மொத்த பங்குகளில் 2.6% பங்குகளை என்விடியா வாங்கியுள்ளது. கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் எலக்ட்ரானிக் பொருட்களை வடிவமைப்பதற்கான மென்பொருள் மற்றும் சேவைகளை வழங்கும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தில் சினோப்சிஸ் பங்குகள் 7.4% உயர்ந்தன. இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை இறுதி வரை இந்த பங்கு கிட்டத்தட்ட 14% சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
”அடுத்த தலைமுறையை சேர்ந்த அறிவார்ந்த அமைப்புகளை உருவாக்குக்குவது சிக்கலான, மிகவும் செலவாகும் காரியமாகும். இது AI திறன்கள் மற்றும் கணினி மூலம் துரிதப்படுத்தப்பட்ட மின்னணுவியல் மற்றும் இயற்பியலின் ஆழமான ஒருங்கிணைப்புடன் பொறியியல் தீர்வுகளைக் கோருகிறது. சினாப்சிஸ் மற்றும் என்விடியாவை விட AI-இயங்கும், முழுமையான அமைப்பு வடிவமைப்பு தீர்வுகளை வழங்கும் இரண்டு நிறுவனங்கள் எதுவும் இல்லை. இரு நிறுவனங்களுன் இணைந்து பொறியியல் தொழில்நுட்பத்தை மறுவடிவமைப்போம் ; அனைத்து பகுதிகளிலும் உள்ள கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிப்போம்” என்று
சினாப்சிஸின் தலைமை நிர்வாக அதிகாரி சாசின் காசி கூறியுள்ளார்.
உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமான என்விடியா, செயற்கை நுண்ணறிவு (AI) எழுச்சிக்கு மத்தியில், OpenAI மற்றும் CoreWeave Inc போன்ற தரவு மைய ஆபரேட்டர்கள் உட்பட பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. இது போட்டியாளரான Intel Corp. இல், PC மற்றும் டேடா மையங்களுக்கான சிப்களை உருவாக்க $500 கோடி முதலீடு செய்யவும் ஒப்புக்கொண்டுள்ளது.
