ஒவ்வொரு பயணிக்கும் 55%கட்டண சலுகை..
இந்தியாவில் ரயில்களில் பயணம் செய்யும் ஒவ்வொரு பயணிக்கும் 55விழுக்காடு கட்டண சலுகை கிடைப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்தால் அவர்களுக்கு கட்டண சலுகை என்பது கோவிட் தொற்றுக்கு முன்பு வரை இருந்து வந்தது. அதனை மத்திய அரசு 2019ஆம் ஆண்டுக்கு பிறகு தொடரவே இல்லை. இந்த சலுகை மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கு நேரடியாக பதில் அளிக்காத மத்திய அமைச்சர் ஏற்கனவே இந்தியாவில் ரயிலில் பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும் 55%கட்டண சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார். இந்தியாவில் அகமதாபாத்தில் நடந்து வரும் புல்லட் ரயில் சேவை பணிகளை பார்வையிட்ட அவர், பணிகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். மூத்த குடிமக்கள் பயணத்தில் சலுகை அளிக்கப்படாமல் வசூலிக்கப்பட்ட தொகை மட்டும் 2022-23 நிதியாண்டில் 2 ஆயிரத்து 242 கோடி ரூபாய் என்று ரயில்வே அமைச்சகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.