3 நிறுவனங்களை வாங்க திட்டமிடும் அதானி..
பிரபல தொழில் குழுமமான அதானி நிறுவனம் அடுத்ததாக உணவு சார்ந்த 3 நிறுவனங்களையும் , ஒரு FMCG நிறுவனத்தையும் வாங்க திட்டமிட்டுள்ளது. அதானி வில்மர் நிறுவனம் இது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக தென்னிந்திய நிறுவனங்களை வாங்கத்தான் அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஃபார்டியூன் ஆயில்ஸ், கோஹினூர் ரைஸ் உள்ளிட்ட பொருட்களை அந்நிறுவனம் ஏற்கனவே விற்று வருகிறது. FMCG வணிகம் தொடர்ந்து அதிக வரவேற்பை பெற்று வரும் நிலையில் வெளிநாட்டு முதலீடுகள் இந்நிறுவனத்தில் குவிகின்றன. அடுத்த 2-3 ஆண்டுகளில் பல நிறுவனங்களை அதானி வில்மர் நிறுவனம் வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 1பில்லியன் அமெரிக்க டாலர்கள் சந்தை மூலதன செலவு செய்ய அந்நிறுவனம் தயாராக உள்ளது. 51,261 கோடி ரூபாய் வருவாயை அந்நிறுனம் 2024-ல் செய்துள்ளது.
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளின் வளர்ச்சி மிக அதிக வேகத்தில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் 30கோடி டன் அளவுக்கு தேவைப்படுவதாகவும், 2.3 கோடி டன் அளவுக்கு சமையல் எண்ணெய் மட்டும் தேவைப்படுகிறது. அதானி வில்மர் நிறுவனத்தின் பங்குகள் கடந்தாண்டு நவம்பரில் 285 ரூபாயில் இருந்து 363 ரூபாயாக தற்போது உயர்ந்துள்ளது. உணவுத்துறையை மேம்படுத்த அதானிகுழுமம் ஹரியானா மாநிலம் கோஹானாவில் புதிய ஆலையை அமைக்கிறது. அதானி நிறுவனத்தின் உணவு விநியோக சங்கிலி மிகப்பெரியதாக உள்ளது. குறிப்பாக 7.4லட்சம் நேரடி கடைகளை அந்நிறுவனம் திறந்துள்ளது. அதிலும் 30ஆயிரம் கடைகள் கிராமங்கள் மற்றும் இரண்டாம்,3ஆம் நிலை நகரங்களாக உள்ளன.