டிவிட்டரில் பெரும் தலைகளின் முதலீடு!!!!
டிவிட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் அண்மையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கிவிட்டார் இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பங்குச்சந்தைகளில் பொதுகணக்காக பட்டியலிடப்பட்ட டிவிட்டர் நிறுவனம் மஸ்க்வாங்கியதால் தனியாருக்கு சொந்தமாகியுள்ளது. உலகின் முன்னணி வங்கிகளில் கடன்பெற்றும், உலகின் பல்வேறு நாடுகளின் பணக்காரர்களை முதலீட்டாளர்களாகவும் மஸ்க் மாற்றியுள்ளார் டிவிட்டர் நிறுவனம் தற்போது மஸ்க் வசம் உள்ள நிலையில், சவுதி மன்னர் மட்டும் 35மில்லியன் பங்குகளை வாங்கிக் குவித்துள்ளார் எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கிவிட்ட நிலையில், மஸ்க் வசம் முழு அதிகாரம் உள்ளது. எனினும் அதிக பங்குகள் வைத்துள்ளதால் சவுதி மன்னர் இரண்டாவது பெரிய முதலீட்டாளர் என்ற இடத்தில் உள்ளார். மேலும் டிவிட்டரை முதன்முதலில் வடிவமைத்த ஜாக் டார்சியும் அதே நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.எலான் மஸ்க், சவுதி மன்னர் மற்றும் ஜாக் டார்சியை தவிர கத்தார் நிறுவனங்களும் அதிகம் முதலீடு செய்துள்ளன. டிவிட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்க உள்ளதாக தகவல் வெளியான போது டிவிட்டரின் பங்குகள் 40 விழுக்காடு குறைந்தபோது கத்தார்மற்றும் சவுதியில் உள்ள தொழிலதிபர்கள் டிவிட்டரின் பங்குகளை அதிகம் வாங்க முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.