கார் விற்பனை அடுத்தாண்டு ஜோராகும்..
இந்தியாவில அடுத்தாண்டு கார் விற்பனை 5 %வரை நடைபெற இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அண்மையில் பெய்த பருவமழை, வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஆகிய காரணிகளால் வரும் ஆண்டு வாடிக்கையாளர்கள் கார்களை அதிகம் வாங்குவார்கள் என்று நம்பப்படுகிறது. இந்தியாவில் இருசக்கர வாகனங்களைவிட எஸ்யுவி ரக கார்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். நடப்பு நிதியாண்டில் முதல் 6 மாதங்கள் கார் விற்பனை குறைவாக இருந்த நிலையில் கடந்த நவம்பரில் 1 விழுக்காடு அதிகரித்து 4%ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் பெருந்தொற்றுக்கு பிறகு விரைவாக மீண்ட கார் சந்தைகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மட்டும் 40லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முதலீட்டாளர்கள் அதிகரிப்பு, நல்ல பருவமழை பொழிவும் இந்தாண்டு சிறப்பாக இருந்ததாகவும், அடுத்த ஆண்டு முதல் இந்த கார் விற்பனை அதிகரிக்கும் என்று நம்பிக்கை உள்ளதாகவும் கியா இந்தியா நிறுவன அதிகாரியான ஹர்தீப் சிங் பிரார் கூறியுள்ளார். 2026 நிதியாண்டில் மட்டும் இந்திய பொருளாதாரம் 6.7%ஆக உயரும் என்ற கணிப்பும் உள்ளது. 2024-ல் மட்டும் இந்தியாவில் இருசக்கரவாகனங்களின் விற்பனை 16.2% உயர்ந்துள்ளது. டிசம்பரில் மட்டும் ஆலைகளில் இருந்து கார் ஷோரூம்களுக்கு செல்லும் கார்களின் அளவு 10 முதல் 12%உயர்ந்து, 3லட்சத்து 15 முதல் 22 ஆயிரம் யூனிட்கள் வரை அதிகரித்துள்ளது. அடுத்து வரும் பண்டிகை காலங்களுக்கு இது பயன்படும் என்றும் கூறப்படுகிறது.