டாக்டர் ரெட்டீஸ் பற்றி ஆய்வறிக்கை..
டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் நியூயார்க் API உற்பத்தி அமைப்பு USFDA நிறுவன ஆய்வு அறிக்கையை வழங்கியது. டாக்டர் ரெட்டிஸ் லெபாரட்டரீஸ் லிமிடெட் நிறுவனம், தனது நியூயார்க்கின் மிடில்பர்க் (Middleburgh) பகுதியில் அமைந்துள்ள தற்போது பயன்பாட்டில் உள்ள மருந்து மூலப்பொருள் (ஆக்டிவ் ஃபார்மசூட்டிகல் இன்கிரிடியன்ட் (API) உற்பத்தி அமைப்புக்கு, அமெரிக்க உணவு & மருந்து நிர்வாகத்திடம் (USFDA) இருந்து நிறுவன ஆய்வு அறிக்கை (EIR) பெற்றுள்ளதாக (ஜூலை 21) அன்று தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை, மே 17, 2025 அன்று இந்த உற்பத்தி அமைப்பில் நடைபெற்ற ஜி.எம்.பி. (GMP) (நல்ல உற்பத்தி நடைமுறை) ஆய்வைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது. USFDA இந்த ஆய்வின் முடிவை ‘தானே முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ள’ (VAI) என வகைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஆய்வு அதிகாரபூர்வமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.
நிறுவன ஆய்வு அறிக்கை (EIR) என்றால் என்ன?
USFDA தனது ஆய்வை நடத்திய பிறகு, நிறுவனத்தின் பதில்களின் அடிப்படையில் 30 நாட்களுக்குள் நிறுவன ஆய்வு அறிக்கை (EIR) ஐ வெளியிடும். இந்த அறிக்கை, ஒரு உற்பத்தி அமைப்பு GMP (முறையான உற்பத்தி நடைமுறைகள்) விதிமுறைகளுக்கு இணங்குவது குறித்து FDA வின் அதிகாரபூர்வமான முடிவை பிரதிபலிக்கிறது. ‘Voluntary Action Indicated’ (VAI) என்ற வகைப்பாடு, குறிப்பிட்ட ஆய்வில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டிருந்தாலும், அவை சிறியவை என்றும், நிறுவனமே அவற்றை சரிசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கலாம் என்றும், FDA வின் கூடுதல் தலையீடு தேவையில்லை என்றும் பொருள்படும்.
இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, BSE இல் டாக்டர் ரெட்டிஸ் லெபரட்டரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் ₹1.40 உயர்ந்து, 0.11% அதிகரித்து, ₹1,259.50 இல் முடிவடைந்தன.
