மீண்டும் இந்தியாவுக்கு சாதகமான சூழல்..
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் ரஷ்ய கச்சா எண்ணெயை மேற்கத்திய நாடுகள் புறக்கணித்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெயை வாங்கி வந்த இந்தியா, தற்போது மீண்டும் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெயை வாங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெயை வாங்கி, ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வது சவாலாக மாறியுள்ளது. ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் ஈராக், சவுதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தொடக்கத்தில் விலையை குறைத்தன. இந்தியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு அதிகளவில் டீசல் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், அமெரிக்க டீசல் அங்கு அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. ஏப்ரலில் இருந்து ஆகஸ்ட் வரை இந்தியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு நாள் தோறும் 225 ஆயிரம் பேரல்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த அளவு 1லட்சத்து 50 ஆயிரம் பேரல்களாக குறைந்துள்ளது. போதுமான வரவேற்பு இல்லாத நிலையில் இந்திய டீசலை வாங்குவோரின் விகிதமும் குறைந்துள்ளது. மேலும் செங்கடல் வழியாக கச்சா எண்ணெயை எடுத்துச்செல்லும்போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் தொடர்ந்து வருவது இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் கிடைக்கும் கச்சா எண்ணெயை விட ரஷ்யாவில் இருந்து குறைவான விலைக்கு இந்தியா கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது.
இதனால் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் கிடைத்து வருகிறது.