காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி குறைகிறதா?

இந்தியாவில் காப்பீடுகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 21 ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் வரி குறைப்பு குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தனிநபர் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டியே இல்லை என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. எனினும் அது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. குரூப் காப்பீடுகளுக்கு 18 %ஜிஎஸ்டி அப்படியே தொடர வாய்ப்புள்ளதாகவும், முழுமையான விலக்கு மூத்த குடிமக்களுக்கு மட்டும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவ காப்பீடுகளுக்கு மட்டும் ஆண்டுதோறும் 2110 கோடி ரூபாய் ஜிஎஸ்டியாக வசூலிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் குழு சேர்ந்து இறுதி முடிவு எடுக்கப்பட இருப்பதாக தகவல்வெளியாகியுள்ளது. 5லட்சம் ரூபாய்க்கு மேலான மருத்துவ காப்பீடுகளுக்கு வரியில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இறுதி முடிவு என்னவாக இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு வலுவாக எழுந்துள்ளது.