உயர்கிறது எச்டிஎப்சி லோன்களின் வட்டி..
இந்தியாவில் எச்டிஎப்சி வங்கியில் கடன் வாங்கியிருந்தால் அவர்களின் கடன்களில் 10 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு வட்டி அதிகரித்திருக்கிறது. புதிய விலை பிப்ரவரி 8 ஆம் தேதி அமலாகிறது. எச்டிஎப்சி நிறுவனத்தில் 75 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் கடன்வாங்கியோரின் அளவு 30 விழுக்காடாக இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு நிறுவனம் வசூலிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்துக்கு ஆங்கிலத்தில் mclrஎன்று பெயராகும். mclrஎன்ற வட்டி விகிதம் 8.80 விழுக்காட்டில் இருந்து 8.90 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. 1மாதத்துக்கான வட்டி விகிதம் 8.95 விழுக்காடாகவும், 3 மாதங்களுக்கான mclrவட்டி விகிதம் 9 புள்ளியில் இருந்து 9.10 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. 6 மாதங்களுக்கான mclrவட்டி 5 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 9.30 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. 3ஆண்டுகளுக்கான mclrஎந்த மாற்றமும் இல்லாமல் 9.35விழுக்காடாகவே தொடர்கிறது.
செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் அடிப்படை வட்டி விகிதம் 9.25%ஆக உள்ளது. வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன்கள் எடுக்கும் முன்பு நிதி ஆலோசகர் ஒருவரிடம் கருத்துகளை கேட்டுக்கொள்வது சிறந்ததாகும்.