கிரிப்டோவில் அதிகமாக முதலீடு செய்துள்ள நாடுகள்
உலக அளவில் கிரிப்டோ கரண்சியை அதிகம் வைத்திருக்கும் மக்களை கொண்ட நாடுகளின் பட்டியலை, ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில்,
2021 ஆம் ஆண்டில் கிரிப்டோ கரன்சி வைத்திருக்கும் முன்னணி 20 நாடுகளின் பெயர்கள் இடம் பெற்று உள்ளன.
இதில் இந்தியாவிற்கு 7வது இடம் கிடைத்துள்ளது. அதாவது, இந்தியர்களின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 7.3 சதவிதம் பேர் கிரிப்டோ கரண்சிகளை வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா தொற்று காலத்தில் உலகளாவிய அளவில் கிரிப்டோ கரன்சியின் பயன்பாடு அதிகரித்திருப்பதாக கூறி உள்ளது.
ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், உக்ரைன் முதலிடத்திலும், ரஷ்யா இரண்டாவது இடத்திலும், வெனிசுலா 3வது இடத்திலும் உள்ளன. அதை தொடர்ந்து, சிங்கப்பூர் 4வது இடத்திலும், கென்யா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முறையே 5, 6 மற்றும் 7வது இடங்களில் உள்ளன.