எப்படி வணிகமாகும் ஐடிசி, ஐடிசி ஹோட்டல்கள்..?
சிகரெட் முதல் பிஸ்கட்கள் வரை வணிகத்தில் கொடிகட்டி பறக்கும் ஐடிசி நிறுவனம் தனது ஹோட்டல் வணிகத்தை வரும் 6 ஆம் தேதி முதல் தனியாக பிரித்து நடத்த இருக்கிறது. இந்த நிலையில் இந்திய பங்குச்சந்தைகளுக்கு ஐடிசி நிறுவனம் தனது புதிய தகவல்களை தெரிவித்துள்ளது. அதில் ஐடிசி பங்குகள் வைத்திருக்கும் பங்குதாரர்களுக்கு ஹோட்டல் பங்குகள் அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் ஐடிசி நிறுவனம் சாதாரண சந்தையில்தான் வணிகத்தை செய்யும். ஐடிசி ஹோட்டல்கள் ஜனவரி 6 ஆம் தேதி காலை 9மணி முதல் 9.45 மணி வரை பங்குச்சந்தை விதிகள் சரிபார்ப்பு நடக்கும். காலை 10 மணிக்கு ஐடிசி ஹோட்டல் பங்குகள் சந்தையில் கிடைக்கும். 3 ஆவது நாள் வர்த்தக நேரத்தின் முடிவில்தான் அந்த பங்குகள் சந்தையில் இருந்து விடைபெறும். ஒவ்வொரு ஐடிசி பங்குதாரருக்கும், ஐடிசி ஹோட்டல்ஸின் பங்கு 10-1 என்று வழங்கப்படும். அதாவது ஐடிசி பங்குகள் 10 இருக்கிறது என்றால் அந்த நபருக்கு ஹோட்டல் பங்கு ஒன்று வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். தாய் நிறுவனத்தில் இருந்து விடைபெற்ற பிறகே புதிய பங்குகளின் விலை அறிவிக்கப்படும். ஐடிசி ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் மொத்த மதிப்புசெப்டம்பர் 30 ஆம் தேதி வரை 7814 கோடி ரூபாயாக உள்ளது. ஐடிசியின் மொத்த மதிப்பில் இந்த பங்குகள் 9.5%ஆகும். ஐடிசி ஹோட்டல்ஸின் புக் மதிப்பு ஒரு பங்குக்கு 37ரூபாய் 57 பைசாவாக தற்போது வரை உள்ளது.
