கார்ப்பரேட் வரி: அரசுக்கு வருவாய் இழப்பு ரூ.1.84 லட்சம் கோடி
கார்ப்பரேட் வரி விகிதங்கள் 2019-20 முதல் குறைக்கப்பட்டதால், 2019-20 மற்றும் 2020-21 ஆம் ஆண்டுகளில் அரசுக்கு ரூ.1.84 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற மதிப்பீடுகள் குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது.
நிதி அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், 2019-20ல் மொத்த கார்ப்பரேஷன் வரி வசூல் அதற்கு முந்தைய வருடத்துடன் ஒப்பிடுகையில் 16% குறைந்து ரூ.5.57 லட்சம் கோடியாக இருந்தது.
ஏழைகளுக்கு வழங்கப்படும் மானியங்களைக் குறைக்கும் முயற்சியில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ‘சலுகை’ அளிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
ஏப்ரலில் தொடங்கிய நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் நிறுவனங்களின் வருமானத்தின் மீது வசூலிக்கப்பட்ட வரி 34% அதிகரித்துள்ளது என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன