சரிவில் முடிந்த இந்திய சந்தைகள்..

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது அமெரிக்கா பரஸ்பர வரி விதித்த நிலையில் இந்திய பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை குறிப்பிடத்தகுந்த சரிவு காணப்பட்டது. வர்த்தகம் தொடங்கியது முதல் இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 322 புள்ளிகள் சரிந்து 76ஆயிரத்து 295புள்ளிகளாகவும். தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 82 புள்ளிகள் குறைந்து 23ஆயிரத்து250 புள்ளிகளாகவும் வணிகம் நிறைவுற்றது. தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் 4 விழுக்காடு வரை சரிவு கண்டன. Power Grid Corp, Sun Pharma, UltraTech Cement, Cipla, Shriram Finance ஆகிய நிறுவன பங்குகள் லாபம் கண்டன. TCS, HCL Technologies, Tech Mahindra, Infosys, ONGC உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் பெரிய இழப்பை சந்தித்தன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் இதுவரை இல்லாத புது உச்சமாக ஒரு சவரனுக்கு 400ரூபாய் உயர்ந்து 68ஆயிரத்து 480 ரூபாயாக வியாழக்கிழமை விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 50 ரூபாய் விலை உயர்ந்து 8 ஆயிரத்து 560ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக 114ரூபாயில் இருந்த வெள்ளி, வியாழக்கிழமை 2 ரூபாய் குறைந்து 112 ரூபாயாக விற்பனையாகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் விலை குறைந்து 1.12லட்சம் ரூபாயாக விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டி3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும்செய்கூலி, சேதாரம் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும் என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும்