2,000 பேரை காக்க வைத்துள்ள இன்போசிஸ்..
பிரபல டெக் நிறுவனமான இன்போசிஸ், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2 ஆயிம் இளைஞர்களுக்கு வேலை தராமல் காக்க வைத்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 2022ஆம் ஆண்டு வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களும் யுவதிகளும் சிஸ்டம் இன்ஜினியர்ஸ், டிஜிட்டல் ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர்ஸ் ஆகிய பணிகளுக்காக எடுக்கப்பட்டவர்கள்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதியுடன் இரண்டு பயிற்சிகளையும் இவர்கள் முடித்துள்ளனர். ஆனால் இதுவரை இவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை,. அதிலும் சிலருக்கு பயிற்சி எப்படி இருக்கும் என்பதற்கான கடவுச்சொல் கூட வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இன்போசிஸ், மிகச்சிறிய அளவில்தான் இந்த புகார்கள் உள்ளதாகவும் கூறி சமாளித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு வேலைக்கு எடுக்கப்பட்ட சிலருக்கு பல மாத காத்திருப்புக்கு பிறகு வேலை வழங்கப்பட்டது. இந்நிலையில் 2022-ல் ஆஃபர் லெட்டர் வழங்கப்பட்ட நிலையில், பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து வருவதால் அவர்கள் கடுப்பாகியுள்ளனர். சிஸ்டம் இன்ஜினியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக 3.6லட்சம் ரூபாயும்,டிஜிட்டல் ஸ்பெஷலிஸ்டுக்கு குறைந்தபட்சம் சம்பளம் ஆண்டுக்கு 6.5லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2ஆயிரம் பேரை பணிக்கு எடுத்துவிட்டு அவர்கள் எதிர்காலத்தை வீணடித்துள்ளதாக NITESஅமைப்பு மத்திய தொழிலாளர் அமைச்சகத்தில் புகார் அளித்துள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெக் நிறுவன பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.