முதலீட்டாளர்களுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் லாபம்

இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக கிடைத்தது. வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளில், வணிகம் தொடங்கியது முதல் இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 131 புள்ளிகள் உயர்ந்து, 75ஆயிரத்து301புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 325 புள்ளிகள் அதிகரித்து 22ஆயிரத்து 834 புள்ளிகளாகவும் வணிகம் நிறைவுற்றது.ICICI Bank, M&M, Shriram Finance, L&T, Tata Motors ஆகிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன.Bajaj Finserv, Bharti Airtel, Tech Mahindra ஆகிய நிறுவன பங்குகள் பெரியளவில் சரிந்தன. ஆட்டோமொபைல், உலோகம், ஆற்றல், ரியல் எஸ்டேட் மற்றும் ஊடகத்துறை பங்குகள் 3 விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. சென்னையில் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்துள்ளது. மார்ச் மாதம் 4 ஆம் தேதி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 8 ஆயிரம் ரூபாயை தொட்டது. அதற்கு அடுத்தடுத்த நாட்களில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று சவரனுக்கு ஆயிரத்து 440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 66 ஆயிரம் ரூபாயை தாண்டி தங்கத்தின் விலை புதிய உச்சம் தொட்டது. இந்த நிலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 66 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் 8 ஆயிரத்து 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி, ஒரு கிலோ ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு நிலையான ஜிஎஸ்டி மற்றும் கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரம் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.