இது ஆப்பிள் மோகம்..
இந்தியாவில் ஐபோன், ஐமேக், ஐபேட்கள், வாட்ச்கள், ஏர்பாட்ஸ் விற்பனை 2லட்சம் கோடி ரூபாயாக்கும் அதிகமாக உள்ளது. இதே அளவு கடந்தாண்டு வெறும் 1.15லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்தியாவில் ஆப்பிள் நிறுவன பொருட்கள் உற்பத்தி என்பது கடந்த 50 ஆண்டுகளில் எந்த நிறுவனத்திலும் இல்லாத அளவுக்கு அதிக ஏற்றுமதி என்கிறார்கள் ஆப்பிள் நிறுவன அதிகாரிகள். சீனாவில் இருந்து பகுதியளவில் வெளியேறிய அமெரிக்கா, இந்தியாவில் தனது உற்பத்தியை அதிகரித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களில் 14 விழுக்காடு அளவுக்கு இந்தியாவில் இருந்துதான் செல்வதாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி நடந்தாலும் அதில் 1.35 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாடுகளுக்குத்தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆப்பிள் நிறுவன உற்பத்தி அதிகரிப்பதில் இந்தியாவின் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்துக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்தியாவில் மட்டும் ஆப்பிள் நிறுவன பொருட்கள் 68 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு விற்கப்பட்டு வருகின்றன. கடந்த 23 நிதியாண்டில் ஐபோன்களின் ஏற்றுமதி சந்தை மதிப்பு வெறும் 66ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. 2028-ல் ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய பங்களிப்பு வெறும் 2 விழுக்காடாக இருந்தது. தற்போது இது 6 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. விஸ்ட்ரான், பெகட்ரான், பாக்ஸ்கான் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஐபோன்கள் ஐரோப்பா, அமெரிக்கா, மேற்கு ஆசிய நாடுகளுக்கு செல்கின்றன. இந்தியாவில் இருந்து ஆப்பிள் நிறுவனம் ஏற்றுமதி செய்யும் பொருட்களின் அளவும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்கு மட்டும் ஒன்றரை லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். அண்மையில் இந்தியாவுக்கு வந்த ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக். டெல்லி மற்றும் மும்பையில் 2 கடைகளை திறந்து வைத்ததுடன் பிரதமர் மோடியையும் நேரடியாக சந்தித்துவிட்டு சென்றார். இந்தியாவின் ஆப்பிள் நிறுவன சந்தை அற்புதமாக இருப்பதாகவும், அமெரிக்காவின் முக்கிய இலக்காக இந்திய சந்தைகள் இருக்கும் என்றும் அவர் சொல்லிவிட்டு சென்றார்.